புதன், 25 ஜூலை, 2012

ஜாவா புரோகிராம் அடிப்படைகள் - ஜாவா தொடர்


இந்த பதிவிலிருந்து ஜாவாவில் நிரலெழுத ஆரம்பித்து விடுவோம். இதுவரை ஜே.ஆர்.இ, ஜே.வி.எம் குறித்து சில அடிப்படைகளைத் தெரிந்து கொண்டோம்.
சி, சி++ நிரல் மொழியைப் போலவே ஜாவாவிலும் main() செயல்கூறிலிருந்து (செயல்கூறு - function) இயங்க ஆரம்பிக்கும். எனினும் ஜாவா மொழி சில இடங்களில் வேறு படுகிறது. ஜாவா மொழி மூலம் தனிமேசைப் பயன்பாடுகள் (desktop applications), இணையப் பயன்பாடுகள் (web applications), செல்லிடப் பயன்பாடுகள் (mobile applications) என அனைத்துவகையான தேவைகளுக்கும் மென்பொருட்களை உருவாக்க முடியும்.
ஜாவா தொலைக்காட்சியிலிருந்து செயற்கைகோள் வரை எல்லா இடத்திலும் இயங்கும். காரணம் ஜாவா உருவாக்கத்தின் நோக்கமே இதற்காகத்தான். ஜாவாவை உருவாக்கிய சன் மைக்ரோசிஸ்டமஸ் மின்னனு சாதனங்களுக்கான மென்பொருள் தீர்வுகளை வழங்கி வந்தது. வெவ்வேறு வன்பொருள் கட்டமைப்புகளில் ஒரேமாதிரி இயங்கக் கூடிய தேடலில்தான் ஜாவா மலர்ந்தது. ஒவ்வொரு வகை மையச் செயலிக்கும் (microprocessor) வெவ்வேறு ஆணை அமைவுகள் (instruction set) இருக்கும். வெவ்வேறு கட்டமைப்புகளில் இயங்குவதற்கு நிரல்களை ஒவ்வொரு முறையும் மாற்றிக் கொண்டிருப்பதற்கு பதிலாக ஒரே முறை எழுதிவிட்டு ஜாவா மெய்நிகர் கணினியில் (java virtual machine) இயக்கிக் கொள்ளலாம். சென்ற பதிவிலேயே பார்த்துவிட்ட இந்தத் தகவலை ஏன் மறுபடியும் பார்க்க வேண்டும்? இதுதான் ஜாவாவின் அடிப்படை. முற்றிலும் புதிதாக கற்றுக் கொள்பவர்களுக்காக மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் படுகிறது.
உங்களுக்கு ஏற்கனவே சி,சி++ போன்ற மொழியில் பரிட்சயம் இருந்தால் ஜாவா கற்றுக் கொள்வது இன்னும் எளிது. for,while,if,int.. என அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்து வைத்ததை ஜாவாவிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். சி, சி++ படிக்காமலேயும் ஜாவா படிக்கலாம். இல்லையே நாங்கள் கேள்விபட்டவரை புதிதாய் கற்றுக் கொள்பவருக்கு சி தான் ஏற்றது என உங்களில் சிலர் முரண்டுபிடிப்பதைப் பார்க்கிறேன். நிரலாக்கத்திற்கு முற்றிலும் புதியவருக்கும் ஜாவாவை அறிமுகப் படுத்தலாம். ஆனால் உரிய கருவிகளைக் கொண்டு. எடுத்த எடுப்பிலேயே முழுவீச்சில் எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதல்ல. தேவையானதை மட்டும் அவரவர் தேவைக்கேற்றாற் போல் அறிமுகப்படுத்தலாம். எக்லிப்ஸ் போன்ற நிரலாக்க கருவிகளைக் கொண்டு ஜாவா நிரல் எழுதும்போது அனைத்து ஜாவா நிரலுக்கும் தேவையான பொதுவான வரிகளை அதுவே எழுதிக் கொடுத்துவிடும். இடையில் உங்களுக்குத் தேவையான நிரல் வரிகளை சொருக வேண்டியதுதான்.
இங்கு ஜாவா தனிமேசை பயன்பாடுகளுக்கான நிரல் உதவியைக் குறித்துதான் முதலில் காணப் போகிறோம். இதற்காக உதவுவது ஜே2.எஸ்.இ (java2 standard edition). இன்னும் j2ee, j2me, java card.. என நிறைய இருக்கிறது. இவை அனைத்திலும் இயங்கும் மொழி ஜாவாதான். வசதிகள்தான் மாறுபடும். எடுத்துகாட்டிற்கு செல்பேசி பயன்பாடுகளுக்கு தனிமேசைக் கணினி செயல்பாடுகளில் இருக்கும் அனைத்து வசதிகளும் தேவைப்படாது. செல்பேசி பயன்பாட்டிற்கென இருக்கும் java2 micro editionல் என்ன தேவையோ அதுமட்டும் இருக்குமாறு தகவமைக்கப்பட்டிருக்கும். நிரல் ஆரம்பிக்கும் மையப் புள்ளி மாறுபடும் அவ்வளவுதான். எடுத்துகாட்டிற்கு ஜாவா அப்லெட் (java applets) ஏற்கனவே படித்திருப்பவர்களுக்கு தெரியும், அவைகளில் main() செயற்கூறே (function) இருக்காது. அதற்கு பதிலாக init() இருக்கும். இங்கு நிரலின் ஆரம்பப் புள்ளி ஏன் மாறுகிறது. இதற்கான விடை இந்த ஜாவா நிரல்கள் எங்கு, எதில் இயங்குகிறது என்பதில் இருக்கிறது. ஆப்லெட்டுகள் உலாவிகளுக்குள்ளே (browsers) இயங்குகின்றன. நீங்கள் எழுதிய நிரல் (ஆப்லெட்) வேறொரு நிரலின் (வலை உலாவி/browser)ன் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தனிமேசை பயன்பாடுகளில் main() செயற்கூறு எழுதக் காரணம் இங்கு கட்டுபாட்டை நீங்களே ஏற்றுக் கொள்கிறீர்கள். அதாவது எங்கிருந்து நிரல் இயங்க வேண்டுமென ஜே.வி.எம் மிற்கு வெளிப்படையாக சொல்ல வேண்டும்.
ஜாவா மெய்நிகர் கணினிக்கு (JVM) அதை இயக்குவது மட்டும்தான் வேலை. ஆளாளுக்கு ஒரு இடத்தைச் சொன்னால் எவ்வளவு கொளறுபடிகள் வரும். அதனால்தான் ஒரு ஜாவா நிரல் இப்படித்தான் இருக்க வேண்டுமென அந்த மொழியை உருவாக்கியவர்கள் வரையறுத்துள்ளனர். JVM முதலில் main() செயற்கூறு எங்கேயிருக்கிறது எனத்தான் தேடும். அங்கிருந்து நிரல் செயல்பட ஆரம்பிக்கும்.
main() செயற்கூறு இல்லாமல் ஜாவாவில் நிரல் எழுதமுடியுமா? தாரளமாக முடியும். ஜாவா நிரல் கோப்பின் பெயர் (java program's file name), நீங்கள் எழுதியுள்ள publi classன் பெயரோடு ஒத்து இருக்கும். நீங்கள் எத்தனை classes எழுதினாலும், அவற்றில் ஏதோ ஒரு classல் main() இருந்தால் போதுமானது. main() செயற்கூறினுள் (inside main function) மற்ற classற்கான ஆப்ஜெக்ட்களை (பொருள்) உருவாக்க வேண்டும். ஒரு ஆப்ஜெக்டை உருவாக்கிய பின் அதிலிருக்கும் மற்ற function, properties அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

J2EE Details


ஜாவா தொடர் - Interface

இந்தப் பதிவில் Interface குறித்து அறிந்து கொள்வோம். C, C++ மொழிகளில் இந்தக் கருத்துரு இல்லை. ஜாவா, C# மொழிகள் interfaceக்கு ஆதரவளிக்கிறது. Interfaceஐ தமிழில் இடைமுகப்பு எனச் சொல்லலாம். Interface declaration ஒரு classஐ declare செய்வதைப் போலவே ஒத்திருக்கும். Interfaceல் methodகளைக் declare செய்யலாமே தவிர define செய்ய இயலாது.


Methodகளை எழுத முடியாதென்றால் பிறகு அப்படியென்ன நன்மை interfaceஆல் கிடைத்து விடப் போகிறது. Interfaceஆல் பல நன்மைகள் புரோகிராமருக்கு உள்ளன. பெரிய ப்ராஜெக்ட்டுகளில் interfaceஐத் தவிர்க்க இயலாது. Interface இல்லாமலும் புரொகிராம் எழுதலாம். Interfaceஐத் தவிர்க்கும் போது என்னென்ன பிரச்சனைகள் வருமெனப் பார்ப்போம். பணியில் அமர்வதற்கு முன்னர் interface என்றால் என்ன என என்னிடம் கேட்டிருந்தால், ஜாவாவில் multiple inheritance இல்லை அதற்குபதில் interface பயன்படுத்திக் கொள்ளலாம் எனச் சொல்லியிருப்பேன். இதில் கொஞ்சம் உண்மையிருக்கிறதே தவிர interfaceன் பயன்பாடே வேறு.


Interface ஒரு class இப்படித்தான் இருக்க வேண்டுமெனச் சொல்கிறது. எந்தெந்த classசெல்லாம் interfaceஐ implement செய்கிறதோ அவை interfaceல் உள்ள methodகளுக்கு விளக்கமளிக்க வேண்டும். ஒரு class ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட interfaceகளை implement செய்கிறதென்றால், அந்த class தனக்கு அறிவுறுத்தப்பட்ட interfaceசுடன் பொருந்திச் செல்கிறதெனச் சொல்லலாம். அதிகப்படியான குழப்பங்கள் விளைவிப்பதன் காரணமாக ஜாவா multiple inheritanceஐ ஆதரவளிப்பதில்லை. ஜாவாவில் எழுதப்படும் எந்தவொரு classக்கும் அதிகப்படியாக ஒரு classன் பண்புகளை மட்டுமே inherit செய்ய முடியும். ஒரு classல் உள்ள பண்புகள் பல classகளுக்குத் தேவைப்படுகிறதென்றால் interface அதற்கு துணை புரியும்.



Animal என்றொரு class உள்ளதென வைத்துக்கொள்வோம்.

class Animal{ int no_of_legs; void run() { } }


நீங்கள் Dog என்றொரு class எழுதப் போகிறீர்கள், அதில் run() method வேண்டுமென நினைக்கிறீர்கள். run() மெத்தட் புதிதாக எழுதுவதற்கு பதில் ஏற்கனவே Animal.classல் எழுதப்பட்டிருக்கும் run() மெத்தடை பயன்படுத்திக் கொள்ளலாம். class Dog extends Animal {} என எழுதுவோம். இதுவே Animal என்பதை classசாக இல்லாமல் இடைமுகப்பாக வைத்திருந்தோமென்றால்...



interface Animal { int no_of_legs; void run(); }


என இருக்கும். Interfaceஐ extend செய்வதற்கு பதில் implement செய்ய வேண்டும். class Dog implements Animal. இங்கு Animal என்பது interface.


ஒரு classக்கு ஆப்ஜெக்ட் உருவாக்குவது போல் interfacக்கு ஆப்ஜெக்ட் உருவாக்க முடியாது.


class Animal.... Animal animal = new Animal();


இதுவே interface Animalலாக இருந்தால் Animal animal = new Animal() என எழுத முடியாது. Interfaceசை வைத்துக் கொண்டு object reference உருவாக்கலாம். பின்னர் அந்த interfaceஐ implement செய்திருக்கும் எந்தவொரு classக்கும் புது ஆப்ஜெக்ட் உருவாக்கி assign செய்து கொள்ளலாம். Animal animal = new Dog(); Dog class Animal interfacசை implement செய்திருக்காவிட்டால் இது சாத்தியமில்லை.


ஜாவா தொடர் - Strings அடிப்படைகள்.


Strings புரோகிராமிங்கில் தவிர்க்க முடியாத ஒன்று. வார்த்தைகள் இல்லையென்றால் மொழி ஏது? பல வார்த்தைகள் சேர்ந்து சொற்றொடர் அமைகிறது. இது புரோகிராமிங் சங்கதிக்கும் பொருந்தும். ஒரு மொழியில் உரையாடுவதற்கு வார்த்தைகள் எவ்வளவு அவசியம், அதுபோல strings பயனர் இடைமுகப்பு உருவாக்கப் பணியில் மிக முக்கிய பயன்வகிக்கிறது. Strings என்பது பயனர் இடைமுகப்பில் மட்டும் வருவதல்ல, இது பல்வேறு இடங்களில் பயன்படும். C மொழி படித்தவரிடம் String என்றால் என்ன என்று கேட்டால், array of characters எழுத்துக்களின் கோர்வை என அழகாக பதில் சொல்லிவிடுவார்.


Integer, float, boolean, character இவையெல்லாம் data typeகள் என அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டிற்கு a, b என இரண்டு variableகள் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். இவை என்ன data type என தெரிந்தால்தான் இவற்றில் என்னென்ன செய்ய முடியும், எவை முடியாது எனக் கூற முடியும். Data typeகள் புரொகிராமிங்கின் அரிச்சுவடி ஆகும். இதை புரிந்து கொள்வதில் சிக்கல் இருப்பதால்தான் புரோகிராமிங் என்பது சிலருக்கு எட்டாக் கனியாகவும், பலருக்கு கசப்பான அனுபவமாகவும் இருக்கிறது.

சரி ஜாவாவில் stringகளை எவ்வாறு பயன்படுத்துதெனப் பார்ப்போம். சி, சி++ போல ஜாவாவிலும் string என்றொரு data type கிடையாது. Stringகை சுக்கு நூறாய் உடைத்தால், கிடைப்பது எழுத்துக்களாக characters இருக்கும். ஜாவாவிலும் Character என ஒரு data type உள்ளது. மிக முக்கியமாய் ஜாவாவில் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இங்கு strings objectகளாகக் கையாளப் படுகிறது. ஆப்ஜெக்ட் என்று ஒன்று இருந்தால், அதற்கு வடிவம் கொடுக்க class ஒன்று இருக்கும். Classஐ இடியாப்ப உரலாகவோ, முறுக்கு உரலாகவோ கற்பனை செய்து கொள்ளுங்கள். நமக்கு தேவையான பொருள் இப்படித்தான் வரவேண்டும் என ஒரு கருவியை வடிவமைத்து வைத்திருக்கிறோம். அதை வைத்துக் கொண்டு வேண்டிய அளவு இடியாப்பத்தையோ, முறுக்கையோ புழிந்து கொள்கிறோம். இதையேத்தான் classகளும் செய்கிறன. ஒரு ஆப்ஜெக்ட் எப்படி இருக்க வேண்டும் எனும் வரையறைகளை அதன் class சொல்கிறது. அந்த class மூலமாக அதன் வகையறாக்களான எத்தனை ஆப்ஜெக்டுகளை வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ளலாம்.


ஜாவாவில் string என்பது ஆப்ஜெக்டுகள் எனத் தெரிந்து கொண்டோம். சரி, ஜாவாவில் stringகளை எவ்வாறு உருவாக்குவது? இதென்ன கேள்வி, stringக்கான classஐக் கொண்டுதான். பின்னர் string ஆப்ஜெக்டை உருவாக்க string class இல்லாமலா?


இந்த classஐ எப்படி எழுதுவது? அட சரியா போச்சு போங்க, நாம எழுதுனா நம்ம கதை கிழிஞ்சிடாதா! அந்த சிரமத்த நமக்கு கொடுக்கக் கூடாதுன்னுதான் ஜாவாவ உருவாக்குன மகராசன்களே string ஆப்ஜெக்டுகளை உருவாக்கிக் கொள்வதற்கு String.classஐயும் தந்துவிட்டு போயிருக்காங்க.



Classகளை ஒழுங்கா அடுக்கி வைக்க packages பயன்படுகிறது. Packageகளை Implicit packages, explicit packages என இருவகையில் குறிப்பிடலாம். Implicit packages என்பது தன்னியல்பாக default வருவது, explicit packages நாமாகவே உருவாக்கிக் கொள்வது. String என்பது ஜாவாவுடன் தன்னியில்பாகவே வரும் class எனப் பார்த்தோம். அது java.lang எனும் packageல் இருக்கிறது. ஒரு classஐ பயன்படுத்த முதலில் அதை import இறக்குமதி செய்ய வேண்டும்.


java.lang.String name; import java.lang.*; String name;


என எழுதுவதற்கு பதில் நேரடியாக String name; என்று எழுதிக் கொள்ளலாம். java.lang packageஐ நாம் import செய்யத் தேவையில்லை, JVMமே அந்த வேலையைப் பார்த்துக் கொள்ளும்.


String name;
name என்றொரு variableஐ உருவாக்குகிறோம், அல்லது ஒரு stringகிற்கு name என்றொரு object referenceஐ (string object) உருவாக்குகிறோம் என்றும் சொல்லலாம். Object oriented programmingல் ஒரு ஆப்ஜெக்டுக்கு variable உருவாக்குகிறோம் எனச் சொல்வதைவிட ஒரு ஆப்ஜெட்டுக்கு reference உருவாக்குகிறோம் எனச் சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும்.
ஒரு string ஆப்ஜெட்டுக்கு reference உருவாக்கி விட்டோம். இதனைப் பயன்படுத்த ஒரு ஆப்ஜெக்டை உருவாக்கி அதன் referenceஐ (மெமரியில் அதன் addressஐக் குறிப்பது) object reference variableல் சுட்ட வேண்டும்.


name = new String("Hello");
name = "Hello";
இதில் எந்த முறையில் வேண்டுமானாலும் நமக்குத் தேவையான stringகளை உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த இரண்டு வழிகள் மட்டுமல்ல,Stringகளை பல வழிகளில் ஜாவாவில் உருவாக்க முடியும். String classல் உள்ள overloaded constructors இதனை சாத்தியமாக்குகின்றது. Constructors குறித்து அடுத்தடுத்த பதிவுகளில் நிதானமாக பார்ப்போம்.
பொதுவாக ஒரு ஆப்ஜெக்டை உருவாக்க 'new' keyword பயன்படுகிறது. Stringகளை உருவாக்க new குறிச்சொல்லை பயன்படுத்தாமலே, சுருக்கு வழியில் உருவாக்கலாம். அந்த சுருக்கு வழி, இரட்டை மேற்கோற் குறிக்குள் எழுதுவது (inside double quotes). இப்படி சுருக்கு வழியில் stringகளை உருவாக்கும் விதத்தை literal notation எனக் குறிப்போம்.
'a' இப்படி எழுதுவதற்கும், "a" என எழுதுவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. முதலாவது 'a' ஆங்கில எழுத்துக்களில் உள்ள முதல் எழுத்தைக் (character) குறிக்கிறது. இரண்டாவது, "a" எனும் stringஐக் குறிக்கிறது. ஜாவாவில் stringகுகள் objectட்டாகக் கையாளப் படுவதால் நமக்கு பல வசதிகள் உள்ளது. பொதுவாக இதில் நாம் செய்ய நினைக்கும் அத்தனை செயல்களுக்கும், அதை செய்வதற்கு உதவியாய் பல்வேறு methodடுகள் நமக்கு வரப்பிரசாதமாய்க் கிடைத்துள்ளன.
Eclipseல் ஒரு stringகையோ, அதனை சுட்டும் referenceஐயோ பயன்படுத்துகையில், ஒரு புள்ளி (period) வைத்ததுமே அதில் என்னென்ன methodகள், என்னென்ன properties இருக்கிறதென்று பட்டியல்லிட்டுவிடும். எதையுமே நாம் மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை. அந்தந்த methodகளின் பெயரைப் படித்தாலே ஓரளவுக்கு யூகித்து விடலாம்.
Stringல் குறிப்பாக அடிக்கடி பயன்படுத்தும் methodகளை பார்த்து விடுவோம். length() என்பது stringகில் ஒரு முக்கியமான method ஆகும். "Rajkumar" எனும் stringல் எத்தனை எழுத்துக்கள் இருக்கிறதென்று அறிய "Rajkumar".length() எனக் கொடுத்தால் போதும். இங்கு stringஐ நாம் நேரடியாகக் கொடுப்பதால், புரோகிராமை இயக்குவதற்கு முன்பே 8 எழுத்துக்கள் என விடையைச் சொல்லி விடலாம். என்ன string வருமென்றே தெரியாது என வைத்துக் கொள்வோம், அந்த இடத்தில் stringதனை சுட்டும் string referenceஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.
எடு: String name;
name = "Rajkumar";
இப்போது நீங்கள் name.length() எனக் கொடுத்தாலும் சரியான விடை வரும்.

அடுத்து வெவ்வேறு stringகளை ஒன்றாய் இணைப்பது (concatenation) எவ்வாறு எனப் பார்ப்போம். இதற்கு concat() method பயன்படுகிறது.
string1.concat(string2);
"Raj".concat("kumar") --------------> "Rajkumar"
new குறிச்சொல் பயன்படுத்தாமலேயே " " மேற்கோள் குறிகளைக் கொண்டு சுருக்கு வழியில் எவ்வாறு stringகளை உருவாக்குவது எனப் பார்த்தோம். அதுபோல concat() methodஐ பயன்படுத்தாமலேயே + கூட்டல் குறியைக் கொண்டும் வெவ்வேறு stringகளை இணைத்துக் கொள்ளலாம்.
"tamil".concat("cpu") என எழுதுவதற்கு பதிலாக "tamil" + "cpu" என எழுதிக் கொள்ளலாம். இவை இரண்டும் ஒரே வெளியீட்டைத்தான் தரும்.
ஜாவாவில் console (console என்றால் திரை. நமது கணினியில் கட்டளைகளை இயக்கும் command prompt/terminal என வைத்துக் கொள்ளுங்கள்) புரோகிராமில் நாம் சொல்ல நினைக்கும் வரிகளை System.out.printlnல் எழுதுவோம். அதைக் கொண்டு சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.
String name = "Rajkumar";
System.out.println("name"); என எழுதினால் "name" என்பதுதான் வெளியீடாகக் (output) கிடைக்கும். இரட்டை மேற்கோள் குறியில் எதை எழுதினாலும் அது string என அர்த்தம் கொள்ளப் படும். System.out.println(name) என்பது நமக்கு வேண்டிய வெளியீட்டைத் தரும்.
String firstName = "Rajkumar";
String lastName = "Ravi";
String fullName = firstName + lastName;

System.out.println(fullName);
System.out.println(firstName + lastName);

இரண்டும் ஒரே வெளியீட்டைத்தான் தரும். RajkumarRavi என எழுதுவதற்கு இரண்டு பெயர்களுக்கும் ஒரு இடைவெளி விட்டு Rajkumar Ravi என எழுதினால் நன்றாக இருக்குமல்லவா. இந்த இரண்டு பெயர்களுக்கும் இடையே " " இப்படி சொருகி விடுங்கள்.
System.out.println(firstName + " " + lastName); System.out.println("Normal: " + firstName); System.out.println("Capital letters: " + firstName.toUpperCase() ); இதற்கு விளக்கம் தேவையில்லையென நினைக்கிறேன்.
ஜாவாவில் stringஸ்களை கையாளும்போது நாம் அடிக்கடி செய்யும் தவறு, இரண்டு stringகளை == operator மூலம் ஒன்றாக உள்ளனவா எனப் (compare) பார்ப்பது.
String name1 = "Raghu";
String name2 = "Raghu123".subString(0,5);

if ( name1 == name2)
System.out.println("name1 and name2 are equal");
else
System.out.println("name1 and name2 are different");

இதற்கு விடையை நாம் யூகித்தால் name1 and name2 are equal என வருமென அடித்துச் சொல்வோம். ஆனால் அதுதான் இல்லை. இரண்டும் ஒன்றில்லையா, ஆம் இரண்டும் ஒன்றில்லை name1றும் name2வும் வெவ்வேறு "Raghu" எனும் stringகளைக் குறிக்கிறது.
சரி இப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.
int a = 5;
int b = 5;
if (a == b)
System.out.println("a is equal to b.");
else
System.out.println("No, first 5 is different from second 5");

இதற்கு விடை a is equal to b என வரும். பொதுவாக ஜாவாவில் எல்லாமே ஆப்ஜெக்டுகளாகத்தான் கையாளப் படுகிறது, data typeற்கு மட்டும் இது விதிவிலக்கானது. வேகமான இயக்கத்திற்காக அடிப்படை data typeகள் C மொழியில் உள்ளது போலவே நேரடியாகக் கையாளப்படுகிது. ஆனால் stringகுகள் data type பிரிவில் வராது என்பதை மீண்டும் நினைவில் நிறுத்திக் கொள்க.
நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு stringகும் தனித்தனி string ஆப்ஜெக்ட்டுகளாகும். ஆப்ஜெக்டுகளை compare செய்ய equals() method பயன்படுகிறது. இது அனைத்து ஆப்ஜெக்டுகளுக்கும் பொருந்தும். ஜாவா தெரியும் என நம் சுயவிவரக் குறிப்பில் (resume) நாம் எழுதியிருந்தால் நம்மிடம் முதலில் வைக்கப் படும் கேள்வி what is the root class of java? ஜாவாவின் ஆணிவேரான மூல class எது என்பதாக இருக்கும். ஜாவாவில் எல்லாமே ஆப்ஜெக்ட்டுகள் என்றால் அந்த class Object.classஆக இல்லாமல் வேறெந்த classஆக இருக்கும். Object classல் இருக்கும் அனைத்து public methodகளையும் எந்தவொரு ஆப்ஜெக்ட்டாக இருந்தாலும் அதில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதான் inheritanceன் மகிமை.
சாதாரணமாக class MyClass { .. என்று எழுதுவோம். ஒரு classஐ inherit செய்ய class MyClass extends AnotherClass {... என எழுதுவோம். இப்போது AnotherClassல் இருக்கும் அனைத்து public methodகளையும் MyClassல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
AnotherClassல் இருக்கும் methodகளுக்கு நாம் எழுதும் MyClassல் புது விளக்கம் கொடுத்தால் அதுதான் overriding. ஜாவாவில் உள்ள அனைத்து ஆப்ஜெக்ட்டுகளும் தன்னியல்பாகவே Object classசினை extend செய்திருப்பதால், Object classல் உள்ள மெத்தட்களை அப்படியேவும் பயன்படுத்தலாம் overridingகும் செய்து கொள்ளலாம். Object classல் ஏகப்பட்ட methodகள் இருந்தாலும் நான் பயன்படுத்திப் பார்த்தது toString() மற்றும் equals().
சரி ஒரு வழியாக stringகிற்கு திரும்புவோம். ஜாவாவில் strings ஆப்ஜெக்ட் என்பதால் Object classன் அங்கமான equals(), toString() methodகளை இயல்பாகவே பயன்படுத்திக் கொள்ளலாம். இரண்டு stringகள் ஒன்றாக இருக்கின்றனவா என சோதிக்க == ஆபரேட்டருக்கு பதிலாக equals() மெத்தடை பயன்படுத்தவும்.
if ( name1.equals(name2)).... எனக் கொடுக்க வேண்டும். பிறகு == ஆப்பரேட்டரை பயன்படுத்தும் போது ஏன் பிழை காட்டவில்லை. equals() மெத்தட் ஆப்ஜெட்டுகளின் உள்ளடக்கம் (contents) ஒன்றாக இருக்கின்றனவா என பரிசோதிக்க. == ஆபரேட்டர் இரண்டும் ஒரே ஆப்ஜெக்ட்டைத்தான் குறிக்கின்றனவா (same reference) என சோதிக்க.

String name1 = "Raj" String name2 = name1; // name1ன் reference name2விற்கும் காப்பி செய்யப் படுகிறது. if (name1 == name2)------> என்றால் சரிதான் என விடை வரும்.
ஜாவா புத்தகத்தில் படித்திருக்கிறீர்களா (திறந்தாவது பார்த்ததுண்டா, என்ன இல்லையா! அட நம்ம ஜாதிதான்.. :) Strings are immutable என்றொரு வாக்கியம் இருக்கும். இல்லையென்றால் நீங்கள் படிப்பது ஜாவா புத்தகம்தானா என்பதை உறுதி செய்து கொள்ளவும். இதில் என்ன சொல்ல வருகிறார்கள். ஆங்கிலத்தில் mutable என்றால் மாற்றக் கூடியது, மாறும் தன்மை கொண்டது எனப் பொருள். Immutable என்பது mutableக்கு எதிர்ப் பதம்.
அதாவது ஜாவாவில் ஒரு stringகை உருவாக்கிய பின்னர் அதில் மாற்றம் செய்ய முடியாது. இதென்ன புதுக்கதை?
String name = "Raghu";
name = "Raj"; "Raghu" எனும் stringகைத்தான் "Raj" எனும் stringகால் overlap செய்து விட்டோமே, பிறகு stringசை immutable எனச் சொல்வது நியாயம்தானா? இல்லை இல்லை "Raj" என்ற புது stringகை உருவாக்குகிறோமே தவிர "Raghu" என்ற stringகை திருத்தி எழுதவில்லை. name என்பது string ஆப்ஜெக்ட் அல்ல, அது உண்மையான stringகளைக் குறிக்கும் வெறும் referenceதான். Referenceகளை மாற்ற முடியுமே தவிர, stringகுகளையல்ல. தேவையில்லாமல் ஆயிரக்கணகான stringகள் இருந்தால் சிஸ்டமே ஸ்தம்பித்து விடும் என்பதை நினைவில் கொள்க. மாறும் வகைகொண்ட stringகளை உருவாக்க StringBuffer class பயன்படுகிறது. அதைக்குறித்து எழுதி பழிபாவங்களுக்கு ஆளாக விரும்பவில்லை, மேலதிக விவரம் வேண்டுவோர் புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ளவும்.
இக்கட்டுரையில் தேவையில்லாக் கதைகள் நிறைய இருக்கின்றது எனக் கருதினால் மன்னிக்கவும், இது ஜாவா ஓரளவுக்கு தெரிந்தவர்களுக்கான தொடரல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புரோகிராம் எழுதுவதை மலையை பெயர்க்கும் வேலையாக நினைக்கும்
அப்பாவிகளுக்காக எனக்கு புரிந்த வரையில் பகிர்ந்து கொள்கிறேன். ஜாவா கற்பது கடினமானது, ஆனால் கற்றே தீர வேண்டும் என நினைப்பவர்களுக்கு இத்தொடரினை அறிமுகப் படுத்துங்கள். எனக்கும் மனநிறைவு கிட்டும். நன்றி. charAt(), subString(), trim()... போன்றவற்றை நீங்களாகவே படித்து பயன்படுத்திப் பாருங்கள்.
சுருக்கமாக நச்சென்று ஜாவா strings பற்றி சொல்ல வேண்டுமானால் java strings are objects &
java strings are immutable.
--

J2EE Tutorial(தமிழ்)


JSPல் புரொகிராம் செய்யத் தொடங்குவது எப்படி?


ஜாவா புரோகிராமிங் மொழி வெப் அப்ளிகேஷன் உருவாக்கத்தில் எவ்வாறு பயன்படுத்தப் படுகிறது என்பதை இப்பதிவில் பார்க்கலாம். வெப் அப்ளிகேஷன்ஸ் உருவாக்க ஜாவா platformல் JSP, Servlet போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் படுகின்றன. JSPயும் serveltம் தனி மொழிகள் இல்லை என்பதை கவனத்தில் கொள்க. இவை J2EE (specification)லிருக்கும் அம்சங்கள். J2EE என்பது Java 2 Enterprise Edition என்பதைக் குறிக்கிறது. J2EE platform என்பது Servlet,jsp,java mail,ejb போன்ற பல்வேறு ஜாவா தொழில்நுட்பங்கள் சேர்ந்த தொகுப்பாகும். J2EEல் இருக்கும் அனைத்து தொழில்நுட்பங்களையும் ஜாவா மூலமாக புரோகிராம் செய்கிறோம்.



ஒரு ஜாவா புரோகிராம் இயங்க, அந்தக் கணினியில் ஜாவா (JDK/JRE) நிறுவப்பட்டிருக்க வேண்டுமென்பதை அறிவோம். அதுபோல jsp, servlet, asp, php... போன்ற தொழில்நுட்பங்களில் உருவாக்கும் புரோகிராம்கள் இயங்க வெப் சர்வர் நிறுவப்பட்டிருக்க வேண்டும். பெரும்பாலான புதியவர்கள் தவறு செய்வது இங்கேதான். இரட்டை க்ளிக் செய்து .html fileஐ ரன் செய்வது போல இயக்க முடியாது. சர்வரில் பதிவேற்றி (deploy) இயக்க வேண்டும். எப்படி ஒரு இணையதளத்தை அணுக ப்ரவுசரில் அதன் முகவரியை சுட்டுகிறோமோ, நீங்கள் பதிவேற்றியிருக்கும் சர்வரின் முகவரியைக் கொடுக்க வேண்டும். அது உங்கள் கணினியிலேயே இருந்தால் localhost எனக் குறிப்பிடலாம் (எடு: http://localhost:8080/myproject/login.html, http://localhost/xampp/test).



JSP மற்றும் Servlet நிரல்களை இயக்க பெரும்பாலும் Apache Tomcat எனும் சர்வரை பயன்படுத்துகின்றனர். இது ஒரு ஓப்பன் சோர்ஸ் அப்ளிகேஷன் சர்வராகும். இது போன்ற சர்வர்களில் இயங்கக்கூடிய புரோகிராம்களை எக்லிப்ஸ், நெட்பீன்ஸ், விசுவல் ஸ்டூடியோ.net போன்ற IDEக்கள் மூலம் உருவாக்கலாம்.


ஜாவாவில் J2SE, J2EE, J2ME பிரிவுகளுக்கேற்ப எக்லிபிஸ் பதிப்பையும் பணிச்சூழலுக்கு தகுந்தற்போல பயன்படுத்தலாம். எடுத்துகாட்டிற்கு ஜாவா command line புரோகிராம், அல்லது டெஸ்க்டாப் அப்ளிகேஷன் போன்றவற்றிற்கு நிரலெழுத Eclipse For Java Developers போதுமானது. வெப் அப்ளிகேஷன்ஸை உருவாக்க Eclipse For J2EE Development பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.




Click Finish .. Now You are Done

HTML பக்கங்களை அழகு படுத்தும் CSS!!


HTML பக்கங்களை அழகு படுத்தும் CSS

CSS, Cascading Style Sheetன் சுருக்கம். இணையதள வடிவமைப்பில் CSSன் பங்கு இன்றியமையாத ஒன்று. CSS என்பது புரோகிராமிங் மொழியும் அல்ல அல்லது HTML போன்ற மார்க்கப் மொழியும் அல்ல. CSS என்பது பக்க வடிவமைப்பிற்கான கட்டளைகளின் தொகுப்பு. கண்ணைக் கவரும் வகையில் உள்ள இணையதளங்களை CSS கட்டளைகளே அழகூட்டுகிறது. ஒரு இணையப் பக்கம் என எடுத்துக் கொண்டால் அதன் உள்ளடக்கம் (content) HTMLலில் எழுதப் பட்டிருக்கும், பலவகை வண்ணங்கள், பக்க வடிவமைப்பு போன்றவை CSSசிலும், நிரலாக்கம் (programming logic) ஜாவாஸ்கிரிப்டிலும் எழுதப்பட்டிருக்கும்.
CSS கட்டளைகளை html பக்கத்தில் உள்ளேயாகவோ அல்லது தனி fileஆகவோ எழுதிக் கொள்ளலாம். HTML பக்கத்தின் உள்ளேயே CSS கட்டளைகளை டேகினுள் (internal style) அல்லது ஒரு டேகின் style attribute மூலம் (inline style)எழுத வேண்டும். HTML கலப்பில்லாமல் CSS கட்டளைகளை மட்டும் எழுதினால் அதை .css நீட்டிப்பில் சேமித்துக் கொள்ளலாம். அப்படி தனி fileலாக இருக்கும் css கட்டளைகளை டேக் வழியாக (external style) HTMLலில் இணைக்க முடியும்.
இப்படி css எழுதும் முறைகளையே
1. Internal css
2. Inline css
3. External css என மூன்று வகையாகப் பிரிக்கின்றனர்.

CSS கட்டளைகளை எழுதுவதற்கென தனி மென்பொருள் தேவையில்லை. ஏதேனும் ஒரு டெக்ஸ்ட் எடிட்டரில் எழுதலாம். இருப்பினும் பணிகளை எளிமைப்படுத்த ஏகப்பட்ட மென்பொருட்கள் இருக்கின்றன. CSS கட்டளைகளை எழுத Notepad++, Gedit, Visual Studio, Eclipse, Netbeans, WebStorm editor, Sublime, BlueFish editor, Dreamweaver, Aptana Studio என அவரவர் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளவும். வெப் டிசைனிங்கில் நாட்டம் உள்ளவர்கள் Dreamweaver studio, Apdtana Studio போன்ற மென்பொருட்களப் பயன்படுத்துங்கள். ஜாவா புரோகிராமர்கள் Eclipse, Netbeans போன்ற மென்பொருட்களிலேயே வடிவமைத்துக் கொள்ள முடியும். டாட் நெட் புரொகிராமர்களுக்கு இருக்கவே இருக்கிறது Visual Studio.
குரோம் பிரவுசரில் html பக்கத்தை திறந்து கொள்ளுங்கள். பின்னர் வலது க்ளிக் செய்து Inspect element தேர்ந்தெடுப்பதன் மூலமும் அந்தபக்கத்திற்கான css கட்டளைகளைக் காண முடியம். தற்காலிமாக css கட்டளைகளை மாற்றி உடனுக்குடன் மாற்றங்களைப் பார்க்க முடியும்.
மொசில்லா ஃபயர்பாக்ஸ் பயன்படுத்துவோர் Firebug என்கிற addon நிறுவிக் கொள்ளவும். இதுகுறித்து வேறொரு பதிவில் விவரமாகப் பார்க்கலாம்.

JQUERY(ஜேக்வரி)


jQuery என்பது ஒரு ஜாவாஸ்கிரிப்ட் library யாகும். இன்று இணைய பக்க வடிவமைப்புகளில் கலக்கி வரும் jQuery குறித்து கணினித் துறையில் இருக்கும் நாம் அவசியம் அறிந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும். நேரடி ஜாவாஸ்கிரிப்ட்டில் இணையப் பக்கம் வடிவமைத்த காலம் போயே போய்விட்டது. இதுபோன்ற library பயன்படுத்தாமல் எழுதப்படும் நிரல் அனைத்து உலாவிகளிலும் ஒரேபோல் இயங்காது. ஆனால் இணையம் என்பது பலவகையான கணினிகள் மூலம் வெவ்வேறு உலாவிகளில் இருந்து அணுகப்படுகிறது. இவையனைத்திலும் இயங்குமாறு நிரலெழுதுவது நேர விரயம் மற்றும் பிழைகள் மலிந்திருப்பதாவும் இருக்கும். Dojo, Prototype, Script.aculo.us, XUI... அப்பப்பா இன்னும் ஏராளமான ஜாவாஸ்கிரிப்ட் libraries உள்ளன. இதில் jQuery பயன்படுத்துவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீங்கள் வெப் அப்ளிகேஷன் உருவாக்கத்தில் இருந்தால் அவசியம் jQuery தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
jQueryன் சிறப்பம்சங்கள்:

எளிமை
மிக வேகமாகக் கற்றுக் கொள்ளலாம்.
ஆற்றல்
மிக வேகமாகவும் இயங்கக் கூடியது.
நளினம்
கடினமான DOM வடிவமைப்பையும் எளிதாக அணுகலாம்.
தரம்
உலகெங்கிலும் பயன்படுத்தப் படுகிறது. மேம்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இலவசம்
இது இலவசம் மட்டுமல்ல கட்டற்ற மென்பொருள். அவரவர்க் கேற்றார்போல் மாற்றம் செய்து பயன்படுத்தலாம்.
வீச்சு
jQuery Mobile, jQuery Touch ஆகியவை செல்பேசிகளுக்கான இணையதளம் மற்றும் செல்பேசி மென்பொருள் உருவாக்கத்திலும் பயன்படுத்தப் படுகிறது.
உதவி
ஏராளமான எடுத்துக்காட்டுகளும், புத்தகங்களும் இருக்கின்றது
கருவிகள்
ஆங்கிலத்தில் Dont reinvent the wheels yourself என்றொரு சொற்றொடர் இருக்கிறது. இதன் பொருள் அனைத்தையும் அடிப்படையிலிருந்து நாம் உருவாக்கத் தேவையில்லை, இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டாலே போதுமானது. இணையப் பக்கங்களை சேமித்து வைத்திருக்கும் உங்கள் கணினியில் உங்களை அறியாமலேயே jQuery ஏற்கனவே இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. உங்கள் கணினியில் jquery*.js எனத் தேடிப் பாருங்கள். :) Jquery in tamil

உங்கள் பெயரை உள்ளிடுக:



பாஸ்கரின் வலைப்பூ

ஆண்ட்ராய்டில் ரேட்டிங்பார் விட்ஜெட் புரொகிராம்


ஆண்ட்ராய்டில் ரேட்டிங்பார் விட்ஜெட் புரொகிராம்

ஆண்ட்ராய்டில் ரேட்டிங்பார் விட்ஜெட் புரொகிராம் செய்வது எப்படி? Download android RatingBar example நான் எழுதிப் பழகிய என்னுடைய முதல் ஆண்ட்ராய்ட் புரோகிராமை இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன். உங்களிடம் ஆண்ட்ராய்ட் SDK, எக்லிப்ஸ் ஆகிய மென்பொருட்கள் இருந்தால் உடனே களத்தில் குதியுங்கள். எக்லிப்சை புதிதாய் பயன்படுத்துபவரைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே எழுதப் பட்டிருக்கும் புரோகிராமை (எக்லிப்ஸ் ப்ராஜெக்டை) எளிதாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கு சில படங்களை இணைத்துள்ளேன். ஜாவாவில் சில விஷயங்களைக் கற்றுக் கொண்டு ஆண்ட்ராய்டில் புரோகிராம் செய்வது எப்படி என்பதையும் தமிழிலேயே பார்த்துவிடலாம். ஜாவாவெல்லாம் தெரியும் ஆண்ட்ராய்டை தமிழில் படித்தால் நல்லாத்தான் இருக்குமென நினைப்பவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். ஆங்கிலத்தில் கற்றுக் கொள்வதில் பிரச்சனையில்லை என நினைப்பவர்கள் http://androidorigin.blogspot.com ப்ளாக்கில் விளக்கங்களைப் பெறலாம்.

ஆண்ட்ராய்ட் கத்துக்கப் போறீங்களா?


மொபைல் டெவலப்பர்களின் தேவை அதிகரிக்கிறது

சென்ற வருட ஸ்மார்ட் போன்களின் விற்பனை எண்ணிக்கை (487.7 மில்லியன்) ஒட்டுமொத்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் மற்றும் நெட்புக்குகள் (414.6 மில்லியன்) விற்பனையை மிஞ்சி விட்டதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையின் போக்கினை கோடிட்டுக் காட்டும் கார்ட்னர், ஐ.டி.சி, கனாலிசிஸ் போன்ற ஆய்வறிக்கை நிறுவனங்கள் வெளியிடும் மொபைல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி பற்றிய தகவல்கள் பிரமிப்பூட்டுவையாக இருக்கிறது. விலை அதிகம் உள்ள ஆப்பிள் 4S, 3GS மொபைல்களின் விற்பனை முந்தைய ஆண்டு விற்பனை சாதனைகளையெல்லாம் முறியடித்து விட்டது. ஆண்ட்ராய்ட் இயக்கச் சூழலில் வரும் சாம்சங் மொபைல் போன்கள், டேப்லட்களின் விற்பனை விகிதமும் ஏறுமுகமாகவே இருக்கிறது. இதில்லாமல் சோனி, மோட்டோரோலா, எல்.ஜி, எச்.டி.சி, ஏசர், விண்டோஸ் மொபைல் எனப் பிரபல தயாரிப்புகளுக்கும் பஞ்சமே இல்லை. குறைந்தபட்ச விலை கொண்ட மொபைலும் பேசுவதற்காக மட்டுமே வாங்கப்படுவதில்லை என்பதை அறிவோம். கேமரா, எம்.பி3 போன்ற வசதிகள் அடிப்படைத் தேவையாகிவிட்ட நிலையில் டச் ஸ்கிரீன் போன்ற வசதிகள் உங்களுக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தைத் தரும். முப்பதாயிரத்தில் இருந்துதான் தொடக்க விலையே என்ற நிலை போய் மூவாயிரத்திற்குக் கூட ஸ்மார்ட் போன்கள் கிடைக்கின்றது. இலவச மொபைல் இயக்கச் சூழலான ஆண்ட்ராய்ட் வந்தபிறகு அதிநவீன வசதிகள் கொண்ட மொபைல் சாதனங்கள் சாமானியர்களும் அணுகும்படியாக உள்ளது. மொபைல் வழியான இணைய தேடல்கள், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைபின்னல் உலாக்கள் டெஸ்க்டாப் கணினிகள் வழியே அனுகும் இணைய பயன்பாடுகளை மிஞ்சும் வண்ணம் இருக்கிறது. வங்கிக் கணக்கை கையாள்வது முதல் இணைய முன்பதிவு வரை ஒட்டுமொத்த டிஜிட்டல் உலகமும் உள்ளங்கையில் அடங்கி விடுகிறது. ஸ்மார்ட் பொன்களின் விலை குறையும்போது இவற்றின் பயன்பாட்டுச் சதவிகிதம் இன்னும் ஏறுமுகத்தில் இருக்கும். ஒரு துறை வளரும்போது அந்தத் துறையில் பணியாற்ற அதிக ஆட்கள் தேவைப்படுவது இயற்கை நியதி. மொபைல் மென்பொருட்களை உருவாக்கும் திறனுள்ள வல்லுனர்களின் தேவை மின்னல் வேகத்தில் எகிறிக் கொண்டே போகிறது. ஐபோன், ஆண்ட்ராய்ட் போன்ற நவீன மொபைல்களுக்கு மென்பொருள் எழுதும் டெவலப்பர்களின் தேவையில் பெரியளவு தட்டுப்பாடு நிலவுகிறது. மொபைல் சாதனங்களுக்கு மென்பொருள் உருவாக்க முற்றிலும் மாறுப்பட்ட அணுகும் முறை தேவைப்படுகிறது. டெஸ்க்டாப் கணினியில் இருப்பது போன்ற நினைவகமோ (memory), செயலியோ (processor) மொபைல் சாதனத்தில் இருக்காது. நீண்ட நேரம் மின்கலத்தில் (battery) சக்தி இருக்க தேவைக்கு மிஞ்சி எந்த வளங்களையும் பயன்படுத்தாத வண்ணம் மொபைலுக்கான மென்பொருளை வடிவமைக்க வேண்டும். இவற்றையெல்லாம் நம் பாடதிட்டதில் படிப்பதற்குள் இலட்சக்கணக்கான மென்பொருள் பொறியாளர்கள் இந்த தொழில்நுட்பங்களில் பணியாற்றிக் கொண்டிருப்பார்கள் என்பதை அறிய வேண்டும். அதற்குள் தற்போதைய இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பாடத்திட்டதைத் தாண்டி படிப்பவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. பி.கு: இக்கட்டுரை கம்ப்யூட்டர் உலகம் மார்ச் 2012 இதழில் வெளிவந்துள்ளது. இதுவே ஒரு மாத இதழில் எழுதிய எனது முதல் கட்டுரை. இக்கட்டுரையை வெளியிட்டு ஊக்கப்படுத்திய கம்ப்யூட்டர் உலகம் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்டிரைடு

ஆண்ட்ராய்ட் சூழலை நம் கணினியில் நிறுவ ஆண்ட்ராய்ட் எஸ்.டி.கே துணை வேண்டும். கூகிளில் android sdk எனத் தேடினீர்கள் என்றால் முதல் சுட்டியிலேயே சரியான தளத்திற்கு சென்று விடலாம். http://developer.android.com/sdk/index.html பக்கத்தில் இருந்து உங்கள் இயக்கச் சூழலிற்கேற்ற (operating system) மென்பொருளைப் பதிவிறக்கவும். இந்த எஸ்.டி.கே உங்களது பல்வேறு ஆண்ட்ராய்ட் இயக்கச் சூழலை நிர்வகிக்கத்தான். இதை நிறுவினால் மட்டுமே உங்களால் ஆண்ட்ராய்ட் பயன்படுத்த இயலாது. உங்களுக்குத் தேவையான ஆண்ட்ராய்ட் இயக்கச் சூழலையும் நிறுவ வேண்டும். எப்படி விண்டோசில் 98, xp, vista, 7 என பல்வேறு பதிப்புகள் இருக்கிறதோ ஆண்ட்ராய்டிலும் 1.5, 1.6, 2, 2.1, 2.2, 3 போன்று பல்வேறு பதிப்புகள் இருக்கின்றது. ஆண்ட்ராய்ட் கற்றுக் கொள்ள இவை அனைத்தும் தேவையில்லை. புதிய பதிப்பை மட்டும் தற்போதைக்கு நிறுவாதீர்கள், ஏனெனில் அது மிக மிக வேகமாக (ரன் ஆவ இரண்டு நாள் ஆயிடும்.. பர்வாயில்லயா) இயங்குகிறது. ஆண்ட்ராய்ட் 2.2 (API Level 8) நிறுவிக் கொள்ளுங்கள். நீங்கள் நிறுவிய அடைவில் (installed folder) என்னென்ன இருக்கிறதென ஒரு நோட்டம் விட்டால் platforms என்றொரு அடைவைக் (folder) காணலாம். நீங்கள் நிறுவிய பல்வேறு ஆண்ட்ராய்ட் பதிப்புகளுக்கேற்ப தனித்தனி அடைவுகள் இங்கு இருக்கும். platforms folder ஆள் அரவமற்ற மொட்டைத் தெரு போல இருந்தால், ஆண்ட்ராய்ட் இயக்கச் சூழலையும் நிறுவ வேண்டுமென்பதை கவனத்தில் கொள்க.
பிறகு இன்னொரு சேதி, உங்கள் நண்பரது கணினியிலோ அல்லது கல்லூரி ஆய்வகத்திலோ அல்லது வேறு எங்கோ ஆண்ட்ராய்ட் நிறுவப்பட்டிருந்தால் உங்கள் கணினியில் பதிவிறக்கித்தான் நிறுவ வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் ஆண்ட்ராய்ட் முழுதாக நிறுவிக் கொள்ளலாம். ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் அடைவை நகலெடுத்து (copy through pen drive or dvd) உங்கள் கணினியில் நிறுவதற்கு தேவையின்றியே பயன்படுத்தலாம்.
எக்லிப்சில் ADT (ஆண்ட்ராய்ட் டெவலப்மெண்ட் டூல்கிட்) எப்படி நிறுவதென அடுத்த பதிவில் பார்க்கலாம் (இன்னும் எத்தன மாசம் ஆகப் போவுதோ? கூகிளின் துணைகொண்டு முன்னேறிப் போய்க் கொண்டே இருக்கவும். எந்த பதிவிற்கும் காத்திருக்காதீர்கள். )

ஆண்ட்ராய்ட் கத்துக்கப் போறீங்களா?

நாளுக்கு நாள் மொபைல் சாதனங்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. வங்கிக் கணக்கை கையாள்வது முதல் திரைப்பட முன்பதிவு வரை விரல்நுனியில் நம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறோம். முப்பதாயிரத்தில் இருந்துதான் தொடக்க விலையே என்ற நிலை போய் மூவாயிரத்திற்குக் கூட ஸ்மார்ட் போன்கள் கிடைக்கின்றது. இலவச மொபைல் இயக்கச் சூழலான ஆண்ட்ராய்ட் வந்தபிறகு அதிநவீன வசதிகள் கொண்ட மொபைல் சாதனங்கள் சாமானியர்களும் அணுகும்படியாக உள்ளது.
ஒரு துறை வளரும்போது அந்தத் துறையில் பணியாற்ற அதிக ஆட்கள் தேவைப்படுவது இயற்கை நியதி. மொபைல் மென்பொருட்களை உருவாக்கும் திறனுள்ள வல்லுனர்களின் தேவை மின்னல் வேகத்தில் எகிறிக் கொண்டே போகிறது. மொபைல் சாதனங்களுக்கு மென்பொருள் உருவாக்க முற்றிலும் மாறுப்பட்ட அணுகும் முறை தேவைப்படுகிறது. டெஸ்க்டாப் கணினியில் இருப்பது போன்ற நினைவகமோ (memory), செயலியோ (processor) மொபைல் சாதனத்தில் இருக்காது. நீண்ட நேரம் மின்கலத்தில் (battery) சக்தி இருக்க தேவைக்கு மிஞ்சி எந்த வளங்களையும் பயன்படுத்தாத வண்ணம் மொபைலுக்கான மென்பொருளை வடிவமைக்க வேண்டும். ஐபோன், ஆண்ட்ராய்ட், ஜாவா மொபைல் ஆகிய அனைத்திலும் மிகப்பெரிய தேவைகள் இருக்கின்றது. இதில் ஆண்ட்ராய்ட் பணிச்சூழலுக்கு மென்பொருள் உருவாக்க எங்கிருந்து தொடங்க வேண்டுமென இப்பதிவில் காண்போம். ஆண்ட்ராய்ட் கற்றுக்கொள்ள ஆசைப்படுவர்களுக்கு எழும் சில கேள்விகள்: என்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்த முடியுமா? ஆண்ட்ராய்ட் மென்பொருட்களை உருவாக்க லினக்ஸ், மேக் ஓஎஸ், விண்டோஸ் என எந்த இயக்கச் சூழலையும் பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் மொபைல் அவசியம் இருக்க வேண்டுமா? மொபைல் தேவையில்லை, எமுலேட்டர் மூலமாக உருவாக்கிக் கொள்ளலாம் (சில வகையான மென்பொருட்களைத் தவிர). எந்தெந்த மென்பொருள் உருவாக்கக் கருவிகள் தேவைப்படும்? செலவு செய்ய வேண்டியிருக்குமா? (Development tools and its cost) ஆண்ட்ராய்ட் எஸ்.டி.கே, ஜாவா உருவாக்க மென்பொருளான எக்லிப்ஸ் என இலவவச திறமூலத் தீர்வுகளையே (free & open source tools) பயன்படுத்திக் கொள்ளலாம் என் கணினியில் உருவாக்கிய மென்பொருளை எளிதாக உண்மையான பொபைலில் நிறுவ முடியுமா? தாராளமாக இயக்க முடியும். இது ஐபோன், ஐபேட் மென்பொருட்களில்தான் சாத்தியமில்லை. ஐபோன் மென்பொருள் உருவாக்கத்தில் பயன்படுத்தப் படுவது சிமுலேட்டர், இங்கு நாம் பயன்படுத்துவது எமுலேட்டர். எமுலேட்டர் மென்பொருளில் உண்மையான மொபைலில் எந்த கட்டளைகள் இயங்குகிறதோ அவை அப்படியே இயக்கப் படுகிறது.

சனி, 17 மார்ச், 2012

VLC பிளேயர்களில் மறைத்து வைத்துள்ள 5 ரகசியங்கள்!!!!!!!!!!!!!!!!!!

கணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றை அறிந்திருப்போம். கணினியில் வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் இலவச மென்பொருள்.இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது. மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அதன் படி VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள மூன்று ரகசிய வசதிகளை பற்றி இங்கு குறிப்பிடுகிறேன். 1)Add Watermarks குறிப்பிட்ட ஒரு வீடியோவுக்கு நம்முடைய பெயரையோ அல்லது நம் பிளாக்கின் பெயரையோ வாட்டர் மார்க்காக கொண்டுவர நாம் வேறு சில மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருப்போம். ஆனால் இந்த வசதி VLC மீடியா பிலேயரிலே இருக்கிறது. அதற்க்கு VLC மென்பொருளை ஓபன் செய்து Tools - Effects and Filters - Video Effects - Vout/Overlay - சென்று வீடியோவுக்கு வாட்டர் மார்க் எபெக்ட் போட்டு கொள்ளலாம்.
2) Video Converter நம்முடைய வீடியோ பைல்களை கன்வேர்ட் செய்ய ஏராளமான இலவச மென்பொருட்களும், கட்டண மென்பொருள்களும் இருக்கின்றன அதில் நமக்கு பிடித்த மென்பொருளை பயன்படுத்தி நாம் வீடியோவை கன்வேர்ட் செய்கிறோம். ஆனால் VLC Media Player ல் இந்த கன்வேர்ட் செய்யும் வசதியும் உள்ளது. அதை உபயோகிக்க Media - Open File - Select Video கன்வேர்ட் செய்ய வேண்டிய வீடியோவை தேர்வு செய்து கொண்டு பின்னர் Ctrl+R கொடுக்கவும். அடுத்த விண்டோவில் ADD பட்டனை கிளிக் செய்து மறுபடியும் வீடியோவை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Convert பட்டனை அழுத்தவும்.
அடுத்து Destination file என்பதில் Browse கிளிக் செய்து உங்கள் பைல் சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து நான் மேலே படத்தில் காட்டியுள்ள பட்டனில் கிளிக் செய்து உங்கள் வீடியோ பார்மட் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
பார்மட் தேர்வு செய்தவுடன் Start பட்டனை அழுத்தினால் உங்கள் வீடியோ கன்வேர்ட் ஆகிவிடும். 3)Free Online Radio: VLC மீடியா ப்ளேயரில் ஆன்லைனில் உள்ள ரேடியோக்களை எந்த வித கட்டணமுமின்றி இலவசமாக கேட்டு ரசிக்கலாம். இந்த வசதியை கொண்டு வர VLC யை ஓபன் செய்து Ctrl + L கொடுக்கவும். உங்களுக்கு இன்னொறு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Internet என்பதை கிளிக் செய்து ரேடியோ சேனல்கள் ஓபன் ஆகும் அதில் பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.
தமிழ் பாட்டு வரல்லன்னா என்ன திட்டாதிங்க. ஆங்கில பாடல்கள் தான் இருக்கும். இப்படி பயனுள்ள வசதிகள் நமக்கு தெரியாமலேயே VLC மீடியா பிளேயரில் ஒளிந்துள்ளது. 4) அப்படி தமிழ் பாட்டு வேணுமா? கீழே உள்ளவாறு செய்யுங்க... vlc playerஎ ஓபன் பண்ணுங்க அப்புறம் media-->open NetWork Device--> அங்கே url கேட்பாங்க.. அதுக்கு பின்வரும் URL எதாவது ஒன்ன கொடுங்க... நீங்க கேட்கலாம் FM...
1)Radio Mirchy---->http://www.tamilradios.com/ownradios/radio-mirchi-tamil-fm.asx
2)Suriyam FM------->http://www.tamilradios.com/ownradios/suryan-fm.asx
3)Hello Fm----------> http://bdcast-ind-hellon-enusew3aswepuku.wm.llnwd.net/bdcast_ind_hellon_enusew3aswepuku
5) வீடியோக்களில் தேவையான பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு...... கணணி பயனாளர்கள் அனைவருக்கும் வி.எல்.சி மீடியா பிளேயர்(VLC Media Player) பற்றி அறிந்திருப்பர். எளிமையான இந்த மென்பொருள் பல்வேறு புதிய வசதிகளை கொண்டு புதிய தொகுப்பாக வெளிவந்துள்ளது. தற்போது இந்த மென்பொருளிலேயே நீங்கள் வீடியோவில் தேவையான பகுதிகளை விருப்பப்படி கட் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் வீடியோ கட்டராகவும் இந்த மென்பொருள் பயன்படும். இதற்கு முதலில் புதிய பதிப்பான VLC 2.0வை உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். VLC மென்பொருளைத் திறந்து View மெனுவில் Advanced Controls என்பதனை கிளிக் செய்தால் மென்பொருளின் கீழ்புறத்தில் புதிய வசதிகளுடைய ஐகான்கள் தோன்றும். அதில் முதல் பட்டன் சிவப்பு நிறத்தில் Record என்றிருக்கும். தேவையான பகுதி ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு முறை அந்த பட்டனில் கிளிக் செய்யவும். பிறகு வீடியோ எதுவரை வேண்டுமோ அதுவரை வீடியோவை ஓடவிடவும். மறுபடியும் அதே Record பட்டனைக் கிளிக் செய்தால் தேவையான வீடியோவின் பகுதி கட் செய்யப்பட்டு விடும். வெட்டப்பட்ட வீடியோ Mp4 போர்மட்டில் My Documents->My Videos கோப்பறையில் சேமிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதில் உள்ள குறை என்று பார்த்தால் தேவையான பகுதி வீடியோவை ஓட விட்டால் மட்டுமே கட் செய்ய முடியும். இருப்பினும் வேகமாக எளிமையான முறையில் கட் செய்து விட VLC மீடியா பிளேயரைப் பயன்படுத்தலாம். தரவிறக்க சுட்டி நீங்க கலக்குங்க பாஸ்.........

வியாழன், 15 மார்ச், 2012

ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?

தகவல் தொழில்நுட்பத் துறையில் கணினிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சந்தைப் பொருள் மொபைல் போன்கள் ஆகும். கணினிகளில் நாம் செய்யும் கிட்டத்தட்ட அனைத்து வசதிகளும் தற்போது மொபைல்களில் வந்துவிட்டன. மொபைல் சந்தைகளின் எதிர்காலத்தை ஓரளவு கணித்த கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்ட் என்னும் இயங்குதளம் மூலம் மொபைல் சந்தையில் களமிறங்கியது. ஆன்ட்ராய்ட் என்பது மொபைல் (Smartphone) மற்றும் டேப்லேட் கணினிகளுக்கான (Tablet PC) இயங்குதளமாகும். இது லினக்ஸ் கெர்நெல் (Linux Kernel) என்னும் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இதில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டது கூகுள். ஆன்ட்ராய்ட் பதிப்புகள் (Android Versions): ஆன்ட்ராய்ட் இயங்குதளம் தொடர்ந்து மேம்படுத்தப்படும். ஒவ்வொரு தடவை மேம்படுத்தப்படும் போதும் பழைய பதிப்பில் உள்ள பிழைகள் களையப்பட்டு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படும். ஒவ்வொரு பதிப்பிற்கும் இனிப்புவகை உணவுகளின் பெயர்களை வைத்துள்ளது கூகுள். இதுவரை வந்துள்ள பதிப்புகளின் பெயர்கள்:
சமீபத்திய பதிப்பு Ice Cream Sandwich (V4.0) ஆகும். ஆன்ட்ராய்ட் புதிய பதிப்பு வந்தவுடனேயே நீங்கள் அதனை பெற முடியாது. நீங்கள் வைத்திருக்கும் மொபைல் மாடலுக்கு உங்கள் மொபைல் நிறுவனம் அந்த வசதியை கொடுக்கும் போது தான் நீங்கள் பெற முடியும். ஆன்ட்ராய்ட் சிறப்பம்சங்கள்:
1. Customize Home Screen - மொபைலின் முகப்பு பக்கத்தை நம் விருப்பப்படி Widget-களை வைத்துக் கொள்ளலாம். 2. Threaded SMS - நாம் அனுப்பும் எஸ்எம்எஸ்கள் வழக்கமான தோற்றத்தில் இல்லாமல், Threaded SMS என்ற புதிய தோற்றத்தில் இருக்கும். Chat-ல் இருப்பது போன்று ஒருவருடன் நாம் அனுப்பும்/பெறும் எஸ்எம்எஸ்கள் ஒரே வரிசையில் இருக்கும். 3. Web Browser - கணினிகளில் பயன்படுத்தும் உலவி போன்றே இதுவும் பயன் தருகிறது. முழுமையான FLASH வசதி இருப்பதால் யூட்யூப் போன்ற விடியோக்களை பார்க்கலாம். தற்போது வந்துள்ள ஐஸ்க்ரீம் சான்ட்விச் பதிப்பில் க்ரோம் உலவியின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. 4. Google Apps - கிட்டத்தட்ட அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் கூகுள் அப்ளிகேஷன்கள் Default-ஆக நிறுவப்பட்டிருக்கும். 4. Voice Action - இது கூகுள் அப்ளிகேசன் ஆகும். உங்கள் குரல் மூலமாகவே உங்கள் மொபைலை இயக்கலாம். அதாவது கால் செய்யலாம், எஸ்எம்எஸ் அனுப்பலாம், பாடல் கேட்கலாம். இது ஆங்கில மொழிக்கு மட்டும் தான். (ஆங்கிலத்தில் பேசினாலும் என் குரலை புரிந்துகொள்ளவில்லை. :) :) :) 5. ScreenShot - மொபைல் திரையில் தெரிவதை எளிதாக ஸ்க்ரீன்ஷாட் எடுக்கலாம். (மேலே உள்ள படம் அப்படி எடுத்தது தான்). மேலும் பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. முழுமையாக படிக்க விக்கிபீடியாவில் பார்க்கவும். ஆன்ட்ராய்ட் பயன்பாடு: ஆன்ட்ராய்ட் மொபைல் (அல்லது டேப்லட்) வாங்கியவுடன் அதனை உங்கள் கூகுள் கணக்குடன் இணைக்க சொல்லும். அப்படி இணைத்தால் தான் Android Application Market உள்பட மேலதிக வசதிகளை பயன்படுத்த முடியும். ஆன்ட்ராய்டில் பல வசதிகள் இருந்தாலும் இது அளவில்லாத இணைய இணைப்பு (Unlimited Internet Connection) உள்ளவர்களுக்கு மட்டுமே பயனாகும். ஏனெனில் பல அப்ளிகேசன்கள் இணைய இணைப்பில் தான் வேலை செய்கிறது. Android Market: ஆன்ட்ராய்ட் மார்க்கெட் என்பது ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை பதிவிரக்குவதர்கான சந்தை ஆகும். இங்கு இலவசமாகவும், பணம் கொடுத்தும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணம் கட்டி வாங்கும் அப்ளிகேசன்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், பதினைந்து நிமிடத்திற்குள் திரும்பக் கொடுத்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஆன்ட்ராய்டில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் இதிலும் குறைபாடுகள் இல்லாமல் இல்லை.

அனைத்து இணையதளத்தையும் 3D – வியூவில் பயர்பாக்ஸ்-ல் பார்க்க

பயர்பாக்ஸ் இணைய உலாவியில் மட்டும் செயல்படக்கூடியது. உங்களிடம் பயர்பாக்ஸ் இணையஉலாவி இல்லை என்றால் www.mozilla.com என்ற தளத்திற்கு சென்று தரவிரக்கி கொள்ளவும். ஒரே நேரத்தில் பல இனையதளங்களை திறந்து வைத்து இருக்கும் நமக்குத்தான் இந்த பதிவு.
பல இணையதளங்களை திறந்து வைத்திருக்கும் போது ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு செல்லும் போது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். இப்ப்படி ஒரு இணையதளத்தில் இருந்து மற்றொரு இணைய தளத்திற்கு 3D-வியூ ல் சென்றால் எப்படி இருக்கும். அதைத்தான் இனி பார்க்கப் போகிறோம். பயர்பாக்ஸ் இணைய உலாவியில் https://addons.mozilla.org/en-US/firefox/addon/8879 முகவரிக்கு செல்லவும். ” Add to Firefox ” என்பதை அழுத்தவும். அதுவாகவே டவுன்லோட் ஆகிவிடும். Install பட்டனை அழுத்தவும்அதன் பின் பயர்பாக்ஸ் -ஐ Retstart செய்யவும்.இப்போது பயர்பாக்ஸ் இணையதளதில் பல இணையதளங்களை திறந்து வைத்துக்கொள்ளவும்.
படம் 1 ல் காட்டிய ஐகான் தேர்வு செய்யவும். நாம் திறந்து வைத்த இணையதளங்களை 3D வியூவில் பார்க்கலாம் விரும்பிய இணையதளத்திற்கும் நொடியில் செல்லலாம்.
படம் 2 ல் காட்டிய ஐகானை தேர்வுசெய்வதன் மூலம் விரும்பியபடி 3D வியூவையும் Background-ம் வடிவமைத்து கொள்ளலாம்.

விண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி...

விண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.
விண்டோஸ் எக்ஸ்பியில் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிப்பது பற்றிய பதிவுக்கு கிடைத்த ஆதரவும் சராசரியாக 100 மேற்பட்டவர்கள் பின்னோட்டம் மூலமும் இமெயில் மூலமும் விண்டோஸ் 7 -ல் இணைப்பு வேகத்தை அதிகரிப்பது எப்படி என்று கேட்டிருந்தனர். உங்கள் அனைவருக்காகவும் விண்டோஸ் 7 -ல் இண்டெர்நெட் இணைப்பு வேகத்தை எப்படி அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்.
முதலில் start பொத்தனை அழுத்தி Run என்பதை தேர்ந்தெடுத்து அதில் படம் 1-ல் காட்டியபடி system.ini என்று கொடுத்து ok பொத்தானை அழுத்தியதும் படம் 2-ல் இருப்பது போல் வந்துவிடும். இதில் ஏற்கனவே நம் கணினிக்கு துனை புரியும் சில கோடிங் வரிகள் கொடுக்கப்பட்டிருக்கும். கோடிங் வரிகள் முடிந்ததும் படம் 2-ல் காட்டியபடி நாம் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கோடை(Code) ஐ காப்பி செய்து அங்கு சேர்க்கவும். page buffer=10000000Tbps load=10000000Tbps Download=10000000Tbps save=10000000Tbps back=10000000Tbps search=10000000Tbps sound=10000000Tbps webcam=10000000Tbps voice=10000000Tbps faxmodemfast=10000000Tbps update=10000000Tbps அடுத்து File மெனுவில் save என்ற பொத்தானை அழுத்தி சேமித்து விட்டு வெளியே வரவும். அடுத்து கணினியை Restart செய்துவிட்டு கணினியின் இண்டெர்நெட் வேகத்தை சோதித்துப்பார்க்கவும். இப்போது இண்டெர்நெட் இணைப்பின் வேகம் அதிகமாக இருக்கும்.

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை XP பயனாளர்களுக்கு மட்டும்.... .

இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.
இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம். சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்.

3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) ..

கணணியை செயற்படுத்தவென உருவாக்கப்பட்டவைதான் இயங்குதளங்கள் (Operating System). இன்னும் சொல்லப்போனால் கணணி வன்பொருட்களுக்கும்(Hardwares) பயனாளர்களுக்கும்(users) இடையிலான ஒரு இடைமுகமாக(Interface) செயற்படுபவை. இவ்வாறான பல இயங்குதளங்கள் இன்றைய உலகில் பல உருவாக்கப்பட்டுள்ளன உருவாக்கபட்டுக்கொண்டிருக்கின்றன. அவ்வாறான பல இயங்குதளங்களாக Windows XP, Windows Vista, Windows 7 , Apple OS, Ubuntu OS, Linux, Google Chrome OS, RISC OS, Amiga OS, MAC OS, போன்ற இன்னும் பல இயங்குதளங்கள் இன்று காணப்படுகின்றன.
அவ்வாறான இயங்குதளங்கள் இருக்கின்ற போதிலும் இவற்றைவிட மிகச்சிறிய அளவில் உருவாக்கப்பட்ட இயங்குதளம் ஒன்றும் உள்ளது. KOLIBRI OS எனப்படும் இந்த இயங்குதளமானது 3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளமாகும். இந்த இயங்குதளமானது Windows,Linux, Mac போன்ற பிற இயங்குதளங்களை அடிப்படையாகக்கொண்டு அமையாமல் CPU நிரலாக்கமொழி எனப்படும் முதலாம் தலைமுறை( First Generation language) மொழியான கணணி இயந்திர மொழியின்(Machine Code) துணையுடன் உருவாக்கப்பட்ட இயங்குதளமாகும். இந்த இயங்குதளமானது மிகச்சிறிய அளவில் மென்பொருள் பொதிகளையும் கொண்டுள்ளது. Games, Tables Editor, Compiler,Text Editor, Demos, Web Browser போன்ற மென்பொருட்கள் உள்ளடங்கலாக இந்த இயங்குதளமானது உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பான மிகச்சிறிய மென்பொருளாகும்.
இயங்குதளம் Download செய்ய

windows 7ல் பழைய மென்பொருளை இயக்க ஒரு எளிய வழி!!!!

உங்களுடைய வாழ்வில் பல்வேறுபட்ட புதுமைகள் நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அதற்கு ஏற்றது போல் நாங்களும் எங்களுடைய தேவைகளை மாற்ற வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது. இந்த வகையில் நாம் புதிதாக ஒரு இயங்கு தளம் அல்லது ஒரு இயங்கு தளத்தின் புதிய பதிப்பு வெளிவரும் போது சில மென்பொருள்களை அவற்றில் இயக்க முடிவதில்லை. உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பு வெளி வந்த போது அதில் எக்ஸ்பீயிற்கு முன்னைய பதிப்புகளில் இயங்கிய ப்ரோக்ரம்களை இயக்க முடியாமல் போனது. அதன் பிறகு வெளிவந்த விஸ்டா பதிப்பிலும் அதே நிலைமைதான். இவ்வாறே இப்போது வெளி வந்துள்ள விண்டோஸ் செவனிலும் அதே நிலைமை தொடர்கிறது. ஒரு இயங்கு தளத்தை மேம்படுத்தி அதன் புதிய பதிப்பை வெளியிடும்போது பழைய எப்லிகேசன்களும் இயங்கத் தக்கதாக அதற்கு ஒத்திசையும் வண்ணம் உருவாக்கவே முயற்சிக்கப்படும். இதனை பேக்வர்ட் கம்படிபிலிட்டி (Backward Compatibility) எனப்படும் இருந்தாலும் சில எப்லிகேசன்களை இவ்வாறு இயக்க முடிவதில்லை எனினும் இந்த சிக்கலுக்கு தீர்வாக மைக்ட்ரோஸொப்ட் நிறுவனம் தனது புதிய இயங்கு தளங்களில் பழைய ப்ரோக்ரம்களையும் இயக்கக் கூடிய வசதியை எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் விண்டொஸ் செவன் பதிப்புகளிலும் வழங்கி வருகிறது. உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீயில் முறையாக இயங்கிய ஒரு ப்ரோக்ரம் விஸ்டாவிற்கு மாறிய பிறகு இயங்க மறுத்தால் அந்த குறிப்பிட்ட ப்ரோக்ரமுக்கு மட்டும் தேவையான செட்டிங்கை மாற்றி இயங்க வைக்கும் வசதி உள்ளது. அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள். இயக்க விரும்பும் ப்ரோக்ரமுக்குரிய .exe பைலின் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் compatibility டேபில் க்ளிக் செய்யுங்கள். அடுத்து Run this program in compatibility mode for என்பதைத் தெரிவு செய்யுங்கள். பின்னர் விண்டோஸின் உரிய பதிப்பைத் தெரிவு செய்து விட்டு ஓகே சொல்லுங்கள். அப்படியும் அது இயங்காது போனால் மேலும் சில தெரிவுகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக அதே டயலொக் பொக்ஸில் Run this program as an administrator என்பதைத் தெரிவு செய்து இயக்கிப் பாருங்கள்.
ப்ரோக்ரம்ஸ் லிஸ்டில் உள்ள Program Compatibility Wizard மூலமாகவும் ஒரு ப்ரோக்ரம் இயங்கு தளத்துடன் ஒத்திசைகிறதா என்பதைப் பரீட்சித்துப் பார்க்கலாம். சரி, இந்த .exe பைலை எங்கே போய்த் தேடுவது? எங்கும் போக வேண்டாம் . (மை) கம்பியூட்டர் விண்டோவில் C ட்ரைவில் ப்ரோக்ரம் பைல்ஸ் போல்டரைத் திறந்து பாருங்கள். நீங்கள் இயக்க விரும்பும் ப்ரோக்ரமுக் குரிய போல்டரும் அங்கு காணப்படும். அந்த போல்டரில் .exe பைலைக் காணலாம்.

Pen Drive-ஐ RAM ஆக பயன்படுத்த வேண்டுமா?

நமது கணனிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். மேலதிகமாக RAM ஒன்றை பொறுத்துவதானால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன. அதேவேலை Pen Drive களின் விலை குறைவானதே. முதலில் Windows Xp யில் எவ்வாறு PEN DRIVE ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணனியின் performanceயை அதிகரிப்பது என பார்ப்போம். முதலில் Pen Drive ஒன்றை ( குறைந்தது 1GB ) USB port வழியாக பொறுத்துங்கள். பின் My Computer ல் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள். அதிலுள்ள Advanced பகுதியில் Performance இல் உள்ள Settings பொத்தானை அழுத்துங்கள். அதன் பின் தோன்றும் வின்டோவில் Advanced பகுதியில் Change பொத்தானை Click செய்து Pen Drive வை தெரிவு செய்து கொள்ளுங்கள். பின் Custom Size என்பதை Click செய்து பயன்படுத்த வேண்டிய அளவை டைப் செய்யுங்கள். (Initial மற்றும் Max எனும் இரு பிரிவிலும் ஒரே அளவை வழங்குங்கள்). பின்னர் Set செய்து உங்கள் கணனியை Restart செய்யுங்கள்.
அல்லது ReadyBoost அல்லது eboostr மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின் வை பொறுத்தி eboostr control pannel இல் pendrive வை add செய்து பயன்படுத்தலாம். (Restart செய்தல் கட்டாயமானதே) Windows 7 யில் எவ்வாறு PEN DRIVE ஒன்றை RAM ஆக பயன்படுத்துவது என பார்ப்போம். உங்களால் நினைத்து பார்க்க முடிகிறதா "உங்கள் கணனி 256GB RAM கொண்டிருந்தால்...." 8 ReadyBoost Devices களை ஒவ்வொன்றும் 32GB கொள்ளவை உடைய pendrive பயன்படுத்தலாம். எனவே Windows 7 இல் மொத்தமாக 256GB RAM வரைக்கும் பயன்படுத்தலாம். உங்கள் Pen Drive ல் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள். அதில் ReadyBoost பகுதியில் Use This Device ஐ தெரிவு செய்யுங்கள்.
"Space to reserve for system speed" என்ற இடத்தில் கூட்டி விடவும். இப்போது Apply செய்து விடுங்கள் , அவ்வளவுதான் ... உயர் performance ஐ அனுபவியுங்கள்...
Hello Fm
Cricket live Stream Radio Mirchy Suryan Fm
Google Plus Ones I like this post