சனி, 17 மார்ச், 2012

VLC பிளேயர்களில் மறைத்து வைத்துள்ள 5 ரகசியங்கள்!!!!!!!!!!!!!!!!!!

கணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றை அறிந்திருப்போம். கணினியில் வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் இலவச மென்பொருள்.இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது. மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அதன் படி VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள மூன்று ரகசிய வசதிகளை பற்றி இங்கு குறிப்பிடுகிறேன். 1)Add Watermarks குறிப்பிட்ட ஒரு வீடியோவுக்கு நம்முடைய பெயரையோ அல்லது நம் பிளாக்கின் பெயரையோ வாட்டர் மார்க்காக கொண்டுவர நாம் வேறு சில மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருப்போம். ஆனால் இந்த வசதி VLC மீடியா பிலேயரிலே இருக்கிறது. அதற்க்கு VLC மென்பொருளை ஓபன் செய்து Tools - Effects and Filters - Video Effects - Vout/Overlay - சென்று வீடியோவுக்கு வாட்டர் மார்க் எபெக்ட் போட்டு கொள்ளலாம்.
2) Video Converter நம்முடைய வீடியோ பைல்களை கன்வேர்ட் செய்ய ஏராளமான இலவச மென்பொருட்களும், கட்டண மென்பொருள்களும் இருக்கின்றன அதில் நமக்கு பிடித்த மென்பொருளை பயன்படுத்தி நாம் வீடியோவை கன்வேர்ட் செய்கிறோம். ஆனால் VLC Media Player ல் இந்த கன்வேர்ட் செய்யும் வசதியும் உள்ளது. அதை உபயோகிக்க Media - Open File - Select Video கன்வேர்ட் செய்ய வேண்டிய வீடியோவை தேர்வு செய்து கொண்டு பின்னர் Ctrl+R கொடுக்கவும். அடுத்த விண்டோவில் ADD பட்டனை கிளிக் செய்து மறுபடியும் வீடியோவை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Convert பட்டனை அழுத்தவும்.
அடுத்து Destination file என்பதில் Browse கிளிக் செய்து உங்கள் பைல் சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து நான் மேலே படத்தில் காட்டியுள்ள பட்டனில் கிளிக் செய்து உங்கள் வீடியோ பார்மட் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
பார்மட் தேர்வு செய்தவுடன் Start பட்டனை அழுத்தினால் உங்கள் வீடியோ கன்வேர்ட் ஆகிவிடும். 3)Free Online Radio: VLC மீடியா ப்ளேயரில் ஆன்லைனில் உள்ள ரேடியோக்களை எந்த வித கட்டணமுமின்றி இலவசமாக கேட்டு ரசிக்கலாம். இந்த வசதியை கொண்டு வர VLC யை ஓபன் செய்து Ctrl + L கொடுக்கவும். உங்களுக்கு இன்னொறு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Internet என்பதை கிளிக் செய்து ரேடியோ சேனல்கள் ஓபன் ஆகும் அதில் பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.
தமிழ் பாட்டு வரல்லன்னா என்ன திட்டாதிங்க. ஆங்கில பாடல்கள் தான் இருக்கும். இப்படி பயனுள்ள வசதிகள் நமக்கு தெரியாமலேயே VLC மீடியா பிளேயரில் ஒளிந்துள்ளது. 4) அப்படி தமிழ் பாட்டு வேணுமா? கீழே உள்ளவாறு செய்யுங்க... vlc playerஎ ஓபன் பண்ணுங்க அப்புறம் media-->open NetWork Device--> அங்கே url கேட்பாங்க.. அதுக்கு பின்வரும் URL எதாவது ஒன்ன கொடுங்க... நீங்க கேட்கலாம் FM...
1)Radio Mirchy---->http://www.tamilradios.com/ownradios/radio-mirchi-tamil-fm.asx
2)Suriyam FM------->http://www.tamilradios.com/ownradios/suryan-fm.asx
3)Hello Fm----------> http://bdcast-ind-hellon-enusew3aswepuku.wm.llnwd.net/bdcast_ind_hellon_enusew3aswepuku
5) வீடியோக்களில் தேவையான பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு...... கணணி பயனாளர்கள் அனைவருக்கும் வி.எல்.சி மீடியா பிளேயர்(VLC Media Player) பற்றி அறிந்திருப்பர். எளிமையான இந்த மென்பொருள் பல்வேறு புதிய வசதிகளை கொண்டு புதிய தொகுப்பாக வெளிவந்துள்ளது. தற்போது இந்த மென்பொருளிலேயே நீங்கள் வீடியோவில் தேவையான பகுதிகளை விருப்பப்படி கட் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் வீடியோ கட்டராகவும் இந்த மென்பொருள் பயன்படும். இதற்கு முதலில் புதிய பதிப்பான VLC 2.0வை உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். VLC மென்பொருளைத் திறந்து View மெனுவில் Advanced Controls என்பதனை கிளிக் செய்தால் மென்பொருளின் கீழ்புறத்தில் புதிய வசதிகளுடைய ஐகான்கள் தோன்றும். அதில் முதல் பட்டன் சிவப்பு நிறத்தில் Record என்றிருக்கும். தேவையான பகுதி ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு முறை அந்த பட்டனில் கிளிக் செய்யவும். பிறகு வீடியோ எதுவரை வேண்டுமோ அதுவரை வீடியோவை ஓடவிடவும். மறுபடியும் அதே Record பட்டனைக் கிளிக் செய்தால் தேவையான வீடியோவின் பகுதி கட் செய்யப்பட்டு விடும். வெட்டப்பட்ட வீடியோ Mp4 போர்மட்டில் My Documents->My Videos கோப்பறையில் சேமிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதில் உள்ள குறை என்று பார்த்தால் தேவையான பகுதி வீடியோவை ஓட விட்டால் மட்டுமே கட் செய்ய முடியும். இருப்பினும் வேகமாக எளிமையான முறையில் கட் செய்து விட VLC மீடியா பிளேயரைப் பயன்படுத்தலாம். தரவிறக்க சுட்டி நீங்க கலக்குங்க பாஸ்.........

வியாழன், 15 மார்ச், 2012

ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?

தகவல் தொழில்நுட்பத் துறையில் கணினிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சந்தைப் பொருள் மொபைல் போன்கள் ஆகும். கணினிகளில் நாம் செய்யும் கிட்டத்தட்ட அனைத்து வசதிகளும் தற்போது மொபைல்களில் வந்துவிட்டன. மொபைல் சந்தைகளின் எதிர்காலத்தை ஓரளவு கணித்த கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்ட் என்னும் இயங்குதளம் மூலம் மொபைல் சந்தையில் களமிறங்கியது. ஆன்ட்ராய்ட் என்பது மொபைல் (Smartphone) மற்றும் டேப்லேட் கணினிகளுக்கான (Tablet PC) இயங்குதளமாகும். இது லினக்ஸ் கெர்நெல் (Linux Kernel) என்னும் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இதில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டது கூகுள். ஆன்ட்ராய்ட் பதிப்புகள் (Android Versions): ஆன்ட்ராய்ட் இயங்குதளம் தொடர்ந்து மேம்படுத்தப்படும். ஒவ்வொரு தடவை மேம்படுத்தப்படும் போதும் பழைய பதிப்பில் உள்ள பிழைகள் களையப்பட்டு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படும். ஒவ்வொரு பதிப்பிற்கும் இனிப்புவகை உணவுகளின் பெயர்களை வைத்துள்ளது கூகுள். இதுவரை வந்துள்ள பதிப்புகளின் பெயர்கள்:
சமீபத்திய பதிப்பு Ice Cream Sandwich (V4.0) ஆகும். ஆன்ட்ராய்ட் புதிய பதிப்பு வந்தவுடனேயே நீங்கள் அதனை பெற முடியாது. நீங்கள் வைத்திருக்கும் மொபைல் மாடலுக்கு உங்கள் மொபைல் நிறுவனம் அந்த வசதியை கொடுக்கும் போது தான் நீங்கள் பெற முடியும். ஆன்ட்ராய்ட் சிறப்பம்சங்கள்:
1. Customize Home Screen - மொபைலின் முகப்பு பக்கத்தை நம் விருப்பப்படி Widget-களை வைத்துக் கொள்ளலாம். 2. Threaded SMS - நாம் அனுப்பும் எஸ்எம்எஸ்கள் வழக்கமான தோற்றத்தில் இல்லாமல், Threaded SMS என்ற புதிய தோற்றத்தில் இருக்கும். Chat-ல் இருப்பது போன்று ஒருவருடன் நாம் அனுப்பும்/பெறும் எஸ்எம்எஸ்கள் ஒரே வரிசையில் இருக்கும். 3. Web Browser - கணினிகளில் பயன்படுத்தும் உலவி போன்றே இதுவும் பயன் தருகிறது. முழுமையான FLASH வசதி இருப்பதால் யூட்யூப் போன்ற விடியோக்களை பார்க்கலாம். தற்போது வந்துள்ள ஐஸ்க்ரீம் சான்ட்விச் பதிப்பில் க்ரோம் உலவியின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. 4. Google Apps - கிட்டத்தட்ட அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் கூகுள் அப்ளிகேஷன்கள் Default-ஆக நிறுவப்பட்டிருக்கும். 4. Voice Action - இது கூகுள் அப்ளிகேசன் ஆகும். உங்கள் குரல் மூலமாகவே உங்கள் மொபைலை இயக்கலாம். அதாவது கால் செய்யலாம், எஸ்எம்எஸ் அனுப்பலாம், பாடல் கேட்கலாம். இது ஆங்கில மொழிக்கு மட்டும் தான். (ஆங்கிலத்தில் பேசினாலும் என் குரலை புரிந்துகொள்ளவில்லை. :) :) :) 5. ScreenShot - மொபைல் திரையில் தெரிவதை எளிதாக ஸ்க்ரீன்ஷாட் எடுக்கலாம். (மேலே உள்ள படம் அப்படி எடுத்தது தான்). மேலும் பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. முழுமையாக படிக்க விக்கிபீடியாவில் பார்க்கவும். ஆன்ட்ராய்ட் பயன்பாடு: ஆன்ட்ராய்ட் மொபைல் (அல்லது டேப்லட்) வாங்கியவுடன் அதனை உங்கள் கூகுள் கணக்குடன் இணைக்க சொல்லும். அப்படி இணைத்தால் தான் Android Application Market உள்பட மேலதிக வசதிகளை பயன்படுத்த முடியும். ஆன்ட்ராய்டில் பல வசதிகள் இருந்தாலும் இது அளவில்லாத இணைய இணைப்பு (Unlimited Internet Connection) உள்ளவர்களுக்கு மட்டுமே பயனாகும். ஏனெனில் பல அப்ளிகேசன்கள் இணைய இணைப்பில் தான் வேலை செய்கிறது. Android Market: ஆன்ட்ராய்ட் மார்க்கெட் என்பது ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை பதிவிரக்குவதர்கான சந்தை ஆகும். இங்கு இலவசமாகவும், பணம் கொடுத்தும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணம் கட்டி வாங்கும் அப்ளிகேசன்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், பதினைந்து நிமிடத்திற்குள் திரும்பக் கொடுத்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஆன்ட்ராய்டில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் இதிலும் குறைபாடுகள் இல்லாமல் இல்லை.

அனைத்து இணையதளத்தையும் 3D – வியூவில் பயர்பாக்ஸ்-ல் பார்க்க

பயர்பாக்ஸ் இணைய உலாவியில் மட்டும் செயல்படக்கூடியது. உங்களிடம் பயர்பாக்ஸ் இணையஉலாவி இல்லை என்றால் www.mozilla.com என்ற தளத்திற்கு சென்று தரவிரக்கி கொள்ளவும். ஒரே நேரத்தில் பல இனையதளங்களை திறந்து வைத்து இருக்கும் நமக்குத்தான் இந்த பதிவு.
பல இணையதளங்களை திறந்து வைத்திருக்கும் போது ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு செல்லும் போது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். இப்ப்படி ஒரு இணையதளத்தில் இருந்து மற்றொரு இணைய தளத்திற்கு 3D-வியூ ல் சென்றால் எப்படி இருக்கும். அதைத்தான் இனி பார்க்கப் போகிறோம். பயர்பாக்ஸ் இணைய உலாவியில் https://addons.mozilla.org/en-US/firefox/addon/8879 முகவரிக்கு செல்லவும். ” Add to Firefox ” என்பதை அழுத்தவும். அதுவாகவே டவுன்லோட் ஆகிவிடும். Install பட்டனை அழுத்தவும்அதன் பின் பயர்பாக்ஸ் -ஐ Retstart செய்யவும்.இப்போது பயர்பாக்ஸ் இணையதளதில் பல இணையதளங்களை திறந்து வைத்துக்கொள்ளவும்.
படம் 1 ல் காட்டிய ஐகான் தேர்வு செய்யவும். நாம் திறந்து வைத்த இணையதளங்களை 3D வியூவில் பார்க்கலாம் விரும்பிய இணையதளத்திற்கும் நொடியில் செல்லலாம்.
படம் 2 ல் காட்டிய ஐகானை தேர்வுசெய்வதன் மூலம் விரும்பியபடி 3D வியூவையும் Background-ம் வடிவமைத்து கொள்ளலாம்.

விண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி...

விண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.
விண்டோஸ் எக்ஸ்பியில் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிப்பது பற்றிய பதிவுக்கு கிடைத்த ஆதரவும் சராசரியாக 100 மேற்பட்டவர்கள் பின்னோட்டம் மூலமும் இமெயில் மூலமும் விண்டோஸ் 7 -ல் இணைப்பு வேகத்தை அதிகரிப்பது எப்படி என்று கேட்டிருந்தனர். உங்கள் அனைவருக்காகவும் விண்டோஸ் 7 -ல் இண்டெர்நெட் இணைப்பு வேகத்தை எப்படி அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்.
முதலில் start பொத்தனை அழுத்தி Run என்பதை தேர்ந்தெடுத்து அதில் படம் 1-ல் காட்டியபடி system.ini என்று கொடுத்து ok பொத்தானை அழுத்தியதும் படம் 2-ல் இருப்பது போல் வந்துவிடும். இதில் ஏற்கனவே நம் கணினிக்கு துனை புரியும் சில கோடிங் வரிகள் கொடுக்கப்பட்டிருக்கும். கோடிங் வரிகள் முடிந்ததும் படம் 2-ல் காட்டியபடி நாம் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கோடை(Code) ஐ காப்பி செய்து அங்கு சேர்க்கவும். page buffer=10000000Tbps load=10000000Tbps Download=10000000Tbps save=10000000Tbps back=10000000Tbps search=10000000Tbps sound=10000000Tbps webcam=10000000Tbps voice=10000000Tbps faxmodemfast=10000000Tbps update=10000000Tbps அடுத்து File மெனுவில் save என்ற பொத்தானை அழுத்தி சேமித்து விட்டு வெளியே வரவும். அடுத்து கணினியை Restart செய்துவிட்டு கணினியின் இண்டெர்நெட் வேகத்தை சோதித்துப்பார்க்கவும். இப்போது இண்டெர்நெட் இணைப்பின் வேகம் அதிகமாக இருக்கும்.

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை XP பயனாளர்களுக்கு மட்டும்.... .

இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.
இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம். சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்.

3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) ..

கணணியை செயற்படுத்தவென உருவாக்கப்பட்டவைதான் இயங்குதளங்கள் (Operating System). இன்னும் சொல்லப்போனால் கணணி வன்பொருட்களுக்கும்(Hardwares) பயனாளர்களுக்கும்(users) இடையிலான ஒரு இடைமுகமாக(Interface) செயற்படுபவை. இவ்வாறான பல இயங்குதளங்கள் இன்றைய உலகில் பல உருவாக்கப்பட்டுள்ளன உருவாக்கபட்டுக்கொண்டிருக்கின்றன. அவ்வாறான பல இயங்குதளங்களாக Windows XP, Windows Vista, Windows 7 , Apple OS, Ubuntu OS, Linux, Google Chrome OS, RISC OS, Amiga OS, MAC OS, போன்ற இன்னும் பல இயங்குதளங்கள் இன்று காணப்படுகின்றன.
அவ்வாறான இயங்குதளங்கள் இருக்கின்ற போதிலும் இவற்றைவிட மிகச்சிறிய அளவில் உருவாக்கப்பட்ட இயங்குதளம் ஒன்றும் உள்ளது. KOLIBRI OS எனப்படும் இந்த இயங்குதளமானது 3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளமாகும். இந்த இயங்குதளமானது Windows,Linux, Mac போன்ற பிற இயங்குதளங்களை அடிப்படையாகக்கொண்டு அமையாமல் CPU நிரலாக்கமொழி எனப்படும் முதலாம் தலைமுறை( First Generation language) மொழியான கணணி இயந்திர மொழியின்(Machine Code) துணையுடன் உருவாக்கப்பட்ட இயங்குதளமாகும். இந்த இயங்குதளமானது மிகச்சிறிய அளவில் மென்பொருள் பொதிகளையும் கொண்டுள்ளது. Games, Tables Editor, Compiler,Text Editor, Demos, Web Browser போன்ற மென்பொருட்கள் உள்ளடங்கலாக இந்த இயங்குதளமானது உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பான மிகச்சிறிய மென்பொருளாகும்.
இயங்குதளம் Download செய்ய

windows 7ல் பழைய மென்பொருளை இயக்க ஒரு எளிய வழி!!!!

உங்களுடைய வாழ்வில் பல்வேறுபட்ட புதுமைகள் நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அதற்கு ஏற்றது போல் நாங்களும் எங்களுடைய தேவைகளை மாற்ற வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது. இந்த வகையில் நாம் புதிதாக ஒரு இயங்கு தளம் அல்லது ஒரு இயங்கு தளத்தின் புதிய பதிப்பு வெளிவரும் போது சில மென்பொருள்களை அவற்றில் இயக்க முடிவதில்லை. உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பு வெளி வந்த போது அதில் எக்ஸ்பீயிற்கு முன்னைய பதிப்புகளில் இயங்கிய ப்ரோக்ரம்களை இயக்க முடியாமல் போனது. அதன் பிறகு வெளிவந்த விஸ்டா பதிப்பிலும் அதே நிலைமைதான். இவ்வாறே இப்போது வெளி வந்துள்ள விண்டோஸ் செவனிலும் அதே நிலைமை தொடர்கிறது. ஒரு இயங்கு தளத்தை மேம்படுத்தி அதன் புதிய பதிப்பை வெளியிடும்போது பழைய எப்லிகேசன்களும் இயங்கத் தக்கதாக அதற்கு ஒத்திசையும் வண்ணம் உருவாக்கவே முயற்சிக்கப்படும். இதனை பேக்வர்ட் கம்படிபிலிட்டி (Backward Compatibility) எனப்படும் இருந்தாலும் சில எப்லிகேசன்களை இவ்வாறு இயக்க முடிவதில்லை எனினும் இந்த சிக்கலுக்கு தீர்வாக மைக்ட்ரோஸொப்ட் நிறுவனம் தனது புதிய இயங்கு தளங்களில் பழைய ப்ரோக்ரம்களையும் இயக்கக் கூடிய வசதியை எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் விண்டொஸ் செவன் பதிப்புகளிலும் வழங்கி வருகிறது. உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீயில் முறையாக இயங்கிய ஒரு ப்ரோக்ரம் விஸ்டாவிற்கு மாறிய பிறகு இயங்க மறுத்தால் அந்த குறிப்பிட்ட ப்ரோக்ரமுக்கு மட்டும் தேவையான செட்டிங்கை மாற்றி இயங்க வைக்கும் வசதி உள்ளது. அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள். இயக்க விரும்பும் ப்ரோக்ரமுக்குரிய .exe பைலின் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் compatibility டேபில் க்ளிக் செய்யுங்கள். அடுத்து Run this program in compatibility mode for என்பதைத் தெரிவு செய்யுங்கள். பின்னர் விண்டோஸின் உரிய பதிப்பைத் தெரிவு செய்து விட்டு ஓகே சொல்லுங்கள். அப்படியும் அது இயங்காது போனால் மேலும் சில தெரிவுகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக அதே டயலொக் பொக்ஸில் Run this program as an administrator என்பதைத் தெரிவு செய்து இயக்கிப் பாருங்கள்.
ப்ரோக்ரம்ஸ் லிஸ்டில் உள்ள Program Compatibility Wizard மூலமாகவும் ஒரு ப்ரோக்ரம் இயங்கு தளத்துடன் ஒத்திசைகிறதா என்பதைப் பரீட்சித்துப் பார்க்கலாம். சரி, இந்த .exe பைலை எங்கே போய்த் தேடுவது? எங்கும் போக வேண்டாம் . (மை) கம்பியூட்டர் விண்டோவில் C ட்ரைவில் ப்ரோக்ரம் பைல்ஸ் போல்டரைத் திறந்து பாருங்கள். நீங்கள் இயக்க விரும்பும் ப்ரோக்ரமுக் குரிய போல்டரும் அங்கு காணப்படும். அந்த போல்டரில் .exe பைலைக் காணலாம்.

Pen Drive-ஐ RAM ஆக பயன்படுத்த வேண்டுமா?

நமது கணனிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். மேலதிகமாக RAM ஒன்றை பொறுத்துவதானால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன. அதேவேலை Pen Drive களின் விலை குறைவானதே. முதலில் Windows Xp யில் எவ்வாறு PEN DRIVE ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணனியின் performanceயை அதிகரிப்பது என பார்ப்போம். முதலில் Pen Drive ஒன்றை ( குறைந்தது 1GB ) USB port வழியாக பொறுத்துங்கள். பின் My Computer ல் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள். அதிலுள்ள Advanced பகுதியில் Performance இல் உள்ள Settings பொத்தானை அழுத்துங்கள். அதன் பின் தோன்றும் வின்டோவில் Advanced பகுதியில் Change பொத்தானை Click செய்து Pen Drive வை தெரிவு செய்து கொள்ளுங்கள். பின் Custom Size என்பதை Click செய்து பயன்படுத்த வேண்டிய அளவை டைப் செய்யுங்கள். (Initial மற்றும் Max எனும் இரு பிரிவிலும் ஒரே அளவை வழங்குங்கள்). பின்னர் Set செய்து உங்கள் கணனியை Restart செய்யுங்கள்.
அல்லது ReadyBoost அல்லது eboostr மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின் வை பொறுத்தி eboostr control pannel இல் pendrive வை add செய்து பயன்படுத்தலாம். (Restart செய்தல் கட்டாயமானதே) Windows 7 யில் எவ்வாறு PEN DRIVE ஒன்றை RAM ஆக பயன்படுத்துவது என பார்ப்போம். உங்களால் நினைத்து பார்க்க முடிகிறதா "உங்கள் கணனி 256GB RAM கொண்டிருந்தால்...." 8 ReadyBoost Devices களை ஒவ்வொன்றும் 32GB கொள்ளவை உடைய pendrive பயன்படுத்தலாம். எனவே Windows 7 இல் மொத்தமாக 256GB RAM வரைக்கும் பயன்படுத்தலாம். உங்கள் Pen Drive ல் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள். அதில் ReadyBoost பகுதியில் Use This Device ஐ தெரிவு செய்யுங்கள்.
"Space to reserve for system speed" என்ற இடத்தில் கூட்டி விடவும். இப்போது Apply செய்து விடுங்கள் , அவ்வளவுதான் ... உயர் performance ஐ அனுபவியுங்கள்...

Movie Maker பிரியா நீங்கள் உங்களுக்க.. விண்டோஸ் 7 ல் ....

Welcome To 4THEPEOPLE Educational Blog. Leave Your Doubts, Suggestions, Feed backs & Comments.Thank You... Windows 7 இல் Windows Movie Maker இல்லையா? நீங்கள் Windows 7 இயங்குதள பாவனையாளரா? இதற்கு முன் Windows Xp அல்லது Vista இல் W MM ஐ பயன்படுத்தியிருப்பீர்கள். ஆனால் Windows 7 லெ Windows Movie Maker காணப்படமாட்டாது. எப்போதாவது Windows Movie Maker இல்லையென கவலைபட்டிருக்கின்றீர்களா? இலகுவாக WMM ஐ Windows7 இயங்குதளத்தில் நிறுவி பயன்படுத்தலாம். எப்படியென பார்ப்போமா...? 1. Vista இயங்குதளம் நிறுவப்பட்டுள்ள கணனியில் உள்ள Windows Movie Maker 6.0 கோப்புளை copy செய்துகொள்ளுங்கள். குறிப்பு: நீங்கள் WMM ஐ Windows 7 64-bit இயற்குதளத்தில் நிறுவவேண்மாயின் , Windows Vista 64-bit கணளியிலிருந்தே WMM கோப்புகளை பெறவேண்டும். (உங்களுக்கு Windows Movie Maker 2.6 ஐ நிறுவிக்கொள்ள வேண்டுமாயின் இங்கு தரப்பட்டுள்ள சுட்டியை Click செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். தரவிறக்க சுட்டி) 2. பின் "C:\Program Files". பின் "Windows Movie Maker 6.0" என்ற பெயரில் புதிய folder ஒன்றை உருவாக்கிகொள்ளுங்கள். அதில் copy செய்து கொண்ட WMM கோப்புகளை pasteசெய்து கொள்ளுங்கள். (Windows Movie Maker 2.6 ஆயின் தரவிறக்கம் செய்த Movie Maker 2.6 installerயை நிறுவிக்கொள்ளுங்கள்). 3. பின்னர் இங்கே தரப்பட்டுள்ள moviemk_dll_registrar.zip இனை தரவிறக்கம் செய்து "C:\Program Files\Windows Movie Maker" இற்கு Extract செய்து installmoviemk dlls.cmd கோப்பை நிறுவுங்கள் (Run as Administrator). 4. பின் desktop ற்கு shortcut ஒன்றை உருவாக்கி இலகுவாக செயற்படுத்தலாம். 5. பயன்படுத்தி பாருங்கள்!

போட்டியின் இறுதியில் வந்து, "போட்டியிலல்ல" மக்கள் மனதில் வெற்றி பெற்ற மனிதன்( ஒவ்வொரு மனிதனும் பார்க்கவேண்டிய கண்ணிரை வரவழைக்கும் பதிவு

போட்டியின் இறுதியில் வந்து, "போட்டியிலல்ல" மக்கள் மனதில் வெற்றி பெற்ற மனிதன்( ஒவ்வொரு மனிதனும் பார்க்கவேண்டிய கண்ணிரை வரவழைக்கும் பதிவு
போட்டியின் இறுதியில் வந்து, "போட்டியிலல்ல" மக்கள் மனதில் வெற்றி பெற்ற மனிதன்( ஒவ்வொரு மனிதனும் பார்க்கவேண்டிய கண்ணிரை வரவழைக்கும் பதிவு) இது வரை நான் பார்த்த வீடியோ படக்காட்சியில் மிக பெஸ்டான க்ளிப் இது. இதை பார்க்கும் போது மனம் நெகிழ்ந்து கண்ணில் இருந்து கண்ணிர் வழிந்தோடியது. இந்த உலகில் வசிக்கும் ஓவ்வொரு மனிதனையும் இன்ஸ்பயர் (inspire) செய்யும் வீடியோ க்ளிப் இது. வாழ்க்கையில் எப்படிபட்ட தோல்விகளும் வலிகளும் வந்தாலும் நாம் வீழ்ந்துவிடாமல் இறுதிவரை போராடினால் வெற்றி நிச்சயம் என்பதை உணரவேண்டும். எந்தவித பிரச்சனைகள் வந்தாலும் அதிலிருந்து மீள முயற்சி செய்து அதில் இருந்து வெளிவர நீ முயற்சி செய்தால் நீ நினைத்தை அடைய முடியும் என்பதையும் அது மட்டுமல்லாமல் நமது பெற்றோர்களும் சகோதர சகோதரிகளும் மற்றும் நண்பர்களும் கடைசி வரை வந்து நாம் வெற்றி அடைய செய்ய உதவி செய்வார்கள் என்பதை இந்த வீடியோ எனக்கு கற்பித்தது . நான் பார்த்து ரசித்து அழுது பாடம் கற்று கொண்ட இந்த வீடியோவை உங்களுக்கு பகிர வேண்டும் என்று நினைத்தன் விளைவே இந்த பதிவு. பார்த்து ரசித்து உங்கள் குழந்தைகளுக்கும் இதை காண்பிக்க வேண்டுகிறேன். காரணம் இந்த காலத்தில் பாடத்தை தவிர ஸ்கூலில் இதை போன்ற செய்திகளை கற்று கொடுக்க மாட்டார்கள்.

Torrent பைல்களை IDM கொண்டும் டவுன்லோட் செய்யலாம் !!

http://torrentz.eu தளத்திற்கு சென்று உங்களுக்கு தறவிறக்கம் செய்ய தேவையான torrent file யை Search செய்து தெரிவு செய்யுங்கள். பின்னர் தெரிவுசெய்த கோப்பின் Download link யை copy செய்து கொள்ளுங்கள்.
பின் http://zbigz.com/ என்ற தளத்திற்கு சென்று copy செய்து கொண்ட Download link இனை படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Paste செய்து பின் Go Free பொத்தானை Click செய்யுங்கள்.
பின்னர் Download பொத்தானை கிளிக் செய்யுங்கள். பின் கிழ் காட்டப்பட்டுள்ளவாறு Archive ஆகியவுடன் தானாக IDM மூலம் குறித்த கோப்பு Download ஆக தொடங்கும்.
இனி கவலையை விட்டு Torrent File களை IDM மூலம் Download செய்து மகிழுங்கள். Download செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர மறந்து விடாதீர்கள்...

புதன், 14 மார்ச், 2012

இதற்கு முன்னர் இது போல் எதுவும் பார்த்ததில்லை….இப்பிடியும் ஒரு சாகசம்!!! (வீடியோ)

பார்க்க மிகவும் வியக்க வைக்கும் சாகசம் இது, இப்படியும் செய்யலாமா என்று வியக்க வைக்கின்றது. எங்களால் இதை நம்ப முடியவில்லை..

செவ்வாய், 13 மார்ச், 2012

ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால் "அயல்நாட்டுத் தமிழர்"

கிடைக்கும் வரை உழைப்பு கிடைத்தபின் பிழைப்பு "பதவி"

ஏழைகளுக்கான இலவச மின்சாரம் "நிலா வெளிச்சம்"

நல்லவர்களையும் நாசமாக்கிவிடும் நாலந்தா பல்கழைக்கழகம் "அரசியல்"

ஆயில் கிணற்று மேலே அயராத இடி மழை "வளைகுடா போர்"

இரவிலும் பகலிலும் இதயத்தில் இடைவிடாத இரைச்சல் "தாய்நாட்டு ஞாபகம்"

இருக்கிற பிசாசுல இந்தப் பிசாசுதான் நல்ல பிசாசு "தேர்தலில் வென்றவர்"

விஞ்ஞான வளர்ச்சியில் அதிக விளைச்சலுக்காய் ஒட்டுக்கட்டி வளர்க்கப்படும் இள வாழைக் கன்றுகள் "இங்கிலீஷ் மீடியம் குழந்தைகள்"

........

1 GB கார்டை 2 GB மெமரி கார்டாக மாற்ற





     மொபைல் போனில் 1 GB கார்டை பயன்படுத்துகிறார்கள் . அந்த கார்டை 2 Gb கார்டாக பயன்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பயன்படுத்துங்கள்.

   1)  இந்த வழிமுறையானது 1 GB  மெமரி கார்டில் மட்டுமே பொருந்தும் . முடிந்தவரை 1 GB கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள்.

  2)  இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன் உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம் நீங்கள் ஒரு பதிவு எடுத்து வைத்து கொள்ளுங்கள் .

  3) இப்போது பின்வரும் மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
      சாப்ட்வேர் ப்ரீ டவுன்லோட்...

4) download செய்யப்பட மென்பொருளை ஓபன் செய்யும்போது பின்வருமாறு தோற்றம் அளிக்கும் .



5)  மென்பொருளை  
ஓபன் செய்த உடன் 955MB default-க காட்டப்படும் ஆதலால் மேல் கூரியது போல 1 GB  மெமரி கார்டை மட்டும் பயன்படுத்தவும்,

6) இப்போது உங்கள் மெமரி கார்டை கணினியில் சொருகவும்,படத்தில் தோன்றுவது போல 955MB காட்டப்படும்

7) FIX என்ற option  தேர்வு செய்து yes பட்டனை கிளிக் செய்யவும்.

8) இப்போது உங்களது மெமரி கார்டில் உள்ள தரவுகள் எல்லாம் அழிந்து 2GB கார்டாக மாறிவிடும்.

9) மெமரி கார்டை கணினியில் இருந்து அகற்றிவிட்டு மீண்டும் கணினியில்சொருகவும்,மெமரி கார்டின் அளவு 1912MB என்று கட்டப்படும். 

10) இது சில குறிப்பிட்ட மெமரி கார்டுகளுக்கு மட்டுமே பொருந்தும்.


கார்டூன் திரைப்படங்களை இனி நாமே உருவாக்கலாம்


   சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கார்டூன் திரைப்படங்களை விரும்பி பார்கிறார்கள் . நாம் ஏன் அப்படிப்பட்ட திரைப்படங்களை உருவாக்க கூடாது !!!!!!!.

  இதுவரை இந்த வகையான கார்டூன் படங்களை குழுவாகவே உருவாகினார்கள் ஆனால் டெக்னாலஜி வளர்ச்சியால் அதனை ஒருவர் மட்டுமே உருவாக்குவதற்கான சாதியக்கூருகள் உருவாகயுள்ளது.

  இதோ உங்களுக்காக சில எளிய மென்பொருள் பற்றிய தகவல்களை தருகிறேன். முயன்று பாருங்கள் திறமை இருந்தால் வெல்லலாம் . முயலுங்கள் வெற்றியை நோக்கி.........
1)

டவுன்லோட் scratch software free

2)


Download the blender software free

3)
crazy talk animator free download torrent

4)


download the torrent for graphics animator




திங்கள், 12 மார்ச், 2012

ADVANCED SYSTEM CARE: கணணியை பாதுகாப்பதற்கு

             கணணியினை பாதுகாத்து அதனது செயல்திறனை அதிகரிக்க செய்யும் சிறந்த மென்பொருளான ADVANCED SYSTEM CARE மென்பொருளின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பான 5 அண்மையில் வெளிவந்துள்ளது. இந்த மென்பொருளின் மூலம் கணணியில் உள்ள கோப்புக்களை சுத்தம் செய்து தேவையற்ற கோப்புக்களை நீக்கி கணணியின் செயல்திறனை அதிகரிக்கலாம்.

முந்தைய பதிப்பினை விட அதிக செயல்திறன் கொண்டதாகவும், விரைவான தொடக்க வசதிகளும் கொண்டுள்ளது. DEEP ஸ்கேன் வசதி மூலம் சுமார் 5 – 10 நிமிடங்களுக்குள் ஸ்கேன் செய்யும் வசதி உள்ளது. அத்துடன் புதிய USER INTREFACE மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் ACTIVE BOOST செயல்பாடு, ஸ்கின் மாற்றியமைக்கும் வசதி என பல மாற்றங்களுடன் வெளிவந்துள்ளது.

தரவிறக்க சுட்டி



சனி, 10 மார்ச், 2012

மைக்ரோசாப்ட் ஆபிஸ்க்கு மாற்று

நண்பர்களே நாம் எப்பொழுதும் வேர்ட் எக்ஸல் போன்றவற்றிற்கு நாடுவது மைக்ரோசாப்டைதான். ஏன் என்றால் அது மிகவும் சுலபமாக இருக்கும் கையாள்வதற்கு என்பதாலேயே அதை உபயோகிக்கிறோம். இத்தனைக்கும் அந்த மென்பொருள் இலவசமில்லை பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும் ஆனால் இந்தியாவில் மைக்ரோசாப்ட் ஆபிஸ் திருட்டு காப்பி எடுத்துதான் உபயோகிக்கிறார்கள். இதற்கு பதில் இலவசமாக கிடைக்கும் ஒபன் ஆபிஸ் போன்ற மென்பொருட்களை பயன்படுத்தலாம். இப்பொழுது ஒரு ஆபிஸ் வெளி வந்திருக்கிறது. அதன் பெயர் கிங்க்சாப்ட் KingSoft Office Suite 2012 இது ஒரு இலவச மென்பொருள்.

இந்த மென்பொருள் மூலம் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட், போன்றவைகளை உருவாக்க முடியும்.

அது மட்டுமல்லாமல் மைக்ரோசாப்ட் வேர்ட் எக்ஸல் பவர்பாயிண்ட் போன்ற கோப்புகளையும் எடிட் செய்ய முடியும்.

நேரடியாக பிடிஎப் கோப்பாகவும் சேமிக்க முடியும்.

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 கோப்புகளையும் எடிட் செய்ய முடியும்.

மென்பொருளுக்குள் டேப் வசதி உண்டு என்பதால் சுலபமாக அடுத்த கோப்பிற்கு சுலபமாக தாவலாம்.

இந்த மென்பொருளை உபயோகிக்க வெறும் 256எம்பி ராம் இருந்தால் போதும் பென்டியம் 3 சிஸ்டம் போதுமானது.

இந்த மென்பொருளின் அளவு வெறும் 70 எம்பி மட்டுமே

மென்பொருளை தரவிறக்க சுட்டி

இப்போது உங்கள் facebook பக்கத்தை பார்ப்பது யார் ? அறிய ஆவலா ?

இப்போது உங்கள் facebook பக்கத்தை பார்ப்பது யார் ? அறிய ஆவலா ?



ஒரு சில வலைப்பதிவுகளில் எத்த‌னை பேர் ஆன்லைனில் இருக்கின்றனர் என்ற விவரம் தெரிவிக்கப்படுவதை பார்க்க முடியும்.ஆனால் இது வெறும் எண்ணிக்கை கணக்கு தான்.அந்த எண்ணிக்கை பின்னே உள்ளே தனிநபர்களை அறிவதற்கான் வாய்ப்பில்லை.அதாவது யாரெல்லாம் நாம் பார்க்கும் இணையபக்கத்தை பார்க்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வழியில்லை.


ஹூ ஈஸ் லைவ் சேவை இதை தான் சாத்தியமாக்குகிறது.பிரவுசர்களுக்கான விரிவாக்கமாக உருவாக்க‌ப்பட்டுள்ள இந்த சேவை இணையவாசிகள் பார்த்து கொண்டிருக்கும் அதே இணையதளத்தை வேறு யாரெல்லாம் பார்க்கின்றனர் என்பதை காண்பிக்கிற‌து.


ஒத்த கருத்துள்ளவர்கள் பேசி மகிழ‌ பல விஷயங்கள் இருக்கும் அல்லவா?அதே போல் ஒரே தளத்தை பார்ப்பாவ்ர்களின் ஆர்வமும் ஒத்து போக‌லாம்.என‌வே அந்த தளத்தில் உள்ள மற்ற இணையவாசிகளோடு கருத்துக்களை பரிமாறி கொண்டு இணைய அர‌ட்டையில் ஈடுபடலாம்.இணைய‌தளத்தை பார்த்து கொண்டே அரட்டை அடிக்கலாம் .


இணையதளத்தின் உள்ளடக்கம் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.பார்த்து கொண்டிருப்பது இகாமர்ஸ் தளம் என்றால் குறிப்பிட்ட பொருளை வாங்குவதற்கு முன் அபிப்ராயம் கேட்கலாம்.இந்த பகிர்வு மூலமே புதிய இணைய நண்பர்கள் கிடைக்க‌லாம்.


பேச்புக் பயனாளிகள் தங்களின் பேஸ்புக் பகிர்வுகளை பார்த்து கொண்டிருப்பது யார் என்றும் தெரிந்து கொண்டு அவர்களோடு உரையாடலில் ஈடுபடலாம்.


இணைய‌ அனுபவத்தை இன்னும் கொஞ்சம் செழுமையானதாக சுவையானதாக ஆக்க இந்த சேவை உதவும்.இந்த சேவையின் மூலம் ஒவ்வொரு இணையபக்கத்தையும் ஒரு அரட்டை அறையாக மாற்றி சக இணையவாசிகளொடு தொடர்பை ஏற்படுத்தி கொள்ளலாம்.


ஆனால் ஒன்று இந்த சேவையில் உறுப்பினராக இருக்கும் இணையவாசிளை மட்டுமே பார்க்க முடியும்.பயர்பாக்ஸ் ,குரோம் மற்றும் ஐ ஆகிய பிரவுசர்களில் இந்த சேவை செல்லுபடியாகிற‌து.

இணையத்தள  முகவரி 


SQL

அவசரமாக ரயிலில் செல்லவேண்டிய கட்டாயம். உடனடியாக ரிசர்வேசன் கவுன்டருக்கு செல்கிறோம்...பணம் கட்டுகிறோம். .. கணினி யில் பிரிண்ட்அவுட் எடுத்து தருகிறார்கள்.............. ஆனால் எத்தனை பேருக்கு தெரியும்... அங்கே என்ன நடக்கிறது என்று? மிகப்பெரிய வங்கியில் தகவல் பரிமாற்றங்கள் தொடர்ந்து சேமிக்கப்பட்டுவருகின்றது. ஆனால் அதன் பின்புலத்தில் என்ன நடைபெறுகின்றது. கொஞ்சம் மாறினாலும் பணக்காரன் ஏழையாகலாம், ஏழை பணக்காரனாகலாம்....எப்படி தகவல்கள் சேமிக்கப்படுகின்றன....... வானவெளிக்கு செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டு அவைகள் பற்பல தகவல்களை நம்மிடையே பரிமாற்றப்பட்டு சேமித்துவைக்கப்படுகின்றது. இப்படித்தான் முதன்முதலில் ஆம்ஸ்டராங் நிலவிற்கு போய் வந்த தகவல்களுடன் சமீபத்தில் நமது சந்திராயன் போய் திரட்டிய தகவல்கள் ஒப்பீட்டு அளவுகள் செய்யப்பட்டது.... இதன் பின் புலத்திலும் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன... இப்படி சேமிக்கப்படும் தகவல்களுக்கு பெயர்தான் தரவுத்தளம்... (டேட்டாபேஸ்) டேட்டம் என்ற சொல்லிருந்து டேட்டா என்ற வார்த்தையை கணினியில் நாம் பயன்படுத்திவருகிறோம். இந்த டேட்டாபேஸ்கள் தான்இன்று உலகில் ஒட்டுமொத்த நிர்வாகத்தை சீரும் சிறப்புமாக நடத்திக்கொண்டு வருபவை. மேலேக்கண்ட எல்லா விபரங்களையும் இந்த டேட்டாபேஸ்கள் தான் நிர்வகித்து வருகின்றன. டேட்டாபேஸ் இல்லாத கணினி என்பது உப்பில்லா பண்டம் குப்பையிலே போன்றதுதான்... அந்த அளவிற்கு இந்த டேட்டாபேசின் பணி மிக முக்கியமானது இவ்வளவு முக்கியத்தும் வாய்ந்த இந்த டேட்டாபேஸ் துறையில் இன்றும் வளமான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஆனால் இத்துறையில் உள்ள நிறுவனங்கள் சரியான ஆட்கள் எங்களுக்கு கிடைப்பதில்லை என்கிறார்கள். ஏன்? டேட்டாபேசை சொல்லித்தருகிறோம் என்று பொத்தாம்பொதுவாக சில கல்விநிறுவனங்கள் சொல்லித்தருகின்றன. அவைகள் எப்படி பயன்படுகின்றன, எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்ற அடிப்படை விபரங்கள் கூட அவர்களுக்கு சொல்லித்தருவதில்லை. அவர்களுக்கு அனுபவ அறிவு இருப்பினும் டேட்டாபேசை பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் போகும்போது கிடைக்க கூடிய வேலை வாய்ப்பும் கைவிட்டு போய்விடுகிறது. இதற்காக சிலவெளிநாட்டு புத்தகங்களை வாங்கிப்படித்தால் அவர்களின் நடை புரிவதற்கு நமக்கும் சிக்கலாக இருக்கும். இதற்கெல்லாம்தீர்வாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் SQL துறையில் அனுபவம் வாய்ந்த பினல் தேவ் மற்றும் நம்ம ஊரு ஆள் வினோத்குமார் (மதுரை) ஆகிய இருவரும் இணைந்து எல்லா தரப்பினரும் புரிந்துகொள்ளும் வகையில் SQL Interview என்ற புத்தகத்தினை வெளியிட்டுள்ளனர். இப்புத்தகத்தில் டேட்டாபேசின் அடிப்படை கட்டமைப்பு முதற்கொண்டு சமீபத்திய வரவான டேட்டாவேர்ஹவுஸ் வரை விளக்கியும் , இன்டர்வியூக்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் அவர்களே சிறப்பான முறையில் பதிலையும் அளித்திருக்கிறார்கள். என்னடா மைக்ரோசாப்ட் நபர்கள் மைக்ரோசாப்ட் SQL மட்டுமே எழுதியிருப்பார்கள் என்று நினைக்கவேண்டாம். எல்லா தரப்பு மென்பொருள் உற்பத்தியாளர்களுக்கும் சேர்த்தே எழுதியிருக்கிறார்கள்....மேலும் புதியநபர்கள் SQL பழகிக்கொள்ள சில மாதிரிகளை விளக்கத்துடன் எழுதியே இணைத்திருக்கிறார்கள். மொத்தத்தில் சிறப்பான புத்தகம்.SQL துறையில் வேலை தேடுபவர்களுக்கும், இத்துறையில் வேலை வாய்ப்பு பெறவிரும்புவர்களும் முக்கியமாக படிக்கவேண்டி ஒரு புத்தம் இது. கிடைக்குமிடம் அமேசான் மற்றும் பிலிப்ஆர்ட் அமேசானில் சற்று விலை அதிகம் , FLIpkart ல் வாங்கலாம்...

மொபைல் வழியாக கிரகங்களுடன் வாக்கிங் போகலாம் வாங்க

கூகிள் ஸ்கை மேப் ஆன்டிராய்டின் அருமையான மென்பொருள்


விண்வெளி துறையில் ஆர்வமுள்ளவர்களும், விண்வெளி துறையில்மில்லாதவர்கள் ஆர்வம் ஏற்படுத்திக்கொள்ளவும் உதவும் மென்பொருள் கூகிள் ஸ்கை மேப்.

அட அப்படியென்ன அதிசயம் என்கிறீர்களா?

உங்கள் மொபைலில் இருந்தபடி இந்நேரத்தில் சூரியன் கிரகம் எங்கே இருக்கும், சந்திரன் கிரகம் எங்கே இருக்கும், மேலும் சூரிய கிரகணத்தின் போது போது சூரியன், சந்திரன் எங்கே உள்ளது போன்ற எல்லா விபரங்களையும் உங்கள் மொபைல் வழியாக காணலாம் நிகழ்நேரத்தில்....

சில நேரங்களில் பகலில் சில நட்சத்திரம் தெரியும். அந்த நட்சத்திரம் எந்த நட்சத்திரம் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

எப்படி சாத்தியம்...

நம்முடைய ஆன்டிராய்டு மொபைல்களில் உள்ளிணைந்த வசதியாக உள்ள ஜிபிஎஸ் கருவி துணைக்கொண்டு நம்முடைய பூகோள இருப்பிடத்தை அறிந்து அதைக்கணக்கில் கொண்டு அந்நேரத்தில் எந்தெந்த கிரங்கள் எங்கே உள்ளது என்பதை செயற்கை கோள்கள் உதவியுடன் காட்டுகிறது நம்முடைய ஆன்டிராய்டு மொபைல்.

வானத்தில் திடீரென ஒரு நட்சத்திரம் பிரகாசமாக தெரிகிறதா? உடனே ஆன்டிராய்டில் உள்ள மென்பொருளை ஆன் பண்ணுங்க... உங்களுக்கு அதியசம் தெரியும்.. ஏன்னா அது சில கிரகமாக கூட இருக்கலாம். அந்த கிரகத்து பெயர் கூட இம்மென்பொருளில் தெரிஞ்சிடலாம் இல்லையா?

வாங்க சூரிய குடும்பத்துடன் நாம வாக்கிங் கூட போகலாம்...... :)

பிளாக்பெர்ரி, நோக்கியா, ஐபோன் என எல்லா மொபைல்களுக்கும் மென்பொருள் சேவை இருக்கிறது
Hello Fm
Cricket live Stream Radio Mirchy Suryan Fm
Google Plus Ones I like this post